திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் எப்போது ? இன்று தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்…

By Selvanayagam PFirst Published Oct 6, 2018, 11:03 AM IST
Highlights

ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், சதிஷ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று 12.30 மணிக்கு அறிவிக்கிறது. அந்த அறிவிப்போடு திருவாரூர் மற்றும் திருப்பங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், சதிஷ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் டிசம்பருடன் ஆடசி முடிவடைகிறது. வரும் ஜனவரி மாதம் அந்த மாநிலங்களில் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் கேட்டுக் கொண்டதையடுத்து அந்த மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டது.

இதையடுத்து தெலங்கான மாநிலத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் தெலங்கான தேர்தல் தேதியும் அறிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்த அறிவிப்பை பிற்பகல் 12.30 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் டெல்லியில் அறிவிக்கிறார்.

இந்நிலையில் திருவாரூர் தொகுதி எம்எல்ஏவும், திமுக தலைவருமான  கருணாநிதி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் இருவரும் மரணமடைந்ததால் அந்த 2 தொகுதிகள் காலியாக உள்ளன . இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது.

click me!