செக் வைத்த எடப்பாடி! விழி பிதுங்கி நிற்க்கும் தினகரன் டீம்?

 
Published : Jun 13, 2018, 11:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
செக் வைத்த எடப்பாடி! விழி பிதுங்கி நிற்க்கும் தினகரன் டீம்?

சுருக்கம்

fight start with edappadi and palanisamy

அ.இ.அ.தி.மு.க கட்சியின் விதிகளில் இருந்து பொதுச் செயலாளர் மற்றும் துணை பொதுச் செயலாளர் பதவியை நீக்கிட தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் எடப்பாடி அண்ட் கோ மகிழ்ச்சியில் உள்ளனர். அதே நேரத்தில் தினகரன் தரப்பு விழி பிதுங்கி நிற்கிறது!

முன்னால் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா இறப்பிற்கு பின்னர் அ.இ.அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளராக திருமதி.சசிகலா நியமிக்கப்பட்டார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற போது தினகரனை துணைப் பொதுச்செயலாளர் பதவியில் நியமித்துவிட்டு சென்றார் சசிகலா. பின்னாட்களில் தனியாக இருந்த ஓ.பி.எஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்தது. இருவரும் சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கினர். ஆனால் இருவரில் பொதுச்செயலாளர் பதவியில் அமரப்போவது யார் என்பது மட்டும் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

ஜெயலலிதா இருந்த இடத்தில் அமர்ந்தால் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என நினைத்த எடப்பாடி அணி பொதுச் செயலாளர் என்ற பதவியையே கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இனி அ.இ.அ.தி.மு.க கட்சியில் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவியே கிடையாது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும்தான். இப்பதவிகளில் ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி இருவரும் இருக்கின்றனர்.

இந்நிலையில் தினகரன் பக்கமிருக்கும் 18 எம்.எல்.ஏ’க்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்த தினகரனுக்கும், பொதுச் செயலாளர் பதவி வகித்த சசிகலாவுக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மேலும் திவாகரன் தனிக்கட்சி தொடங்கி தினகரன் தரப்புக்கு அழுத்தம் கொடுக்கிறார். திவாகரன் கட்சி தொடங்கியிருப்பது பற்றி எடப்பாடி அணியினர் மகிழ்ச்சியடையத்தான் செய்வார்கள்.

 இதனிடையே 18 எம்.எல்.ஏ’க்கள் மீதான் தகுதி நீக்க வழக்கை நம்பி இருக்கிறார் தினகரன். அந்த வழக்கின் மீதான தீர்ப்பும் விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு ஆதரவாக அமையும் பட்சத்தில் எடப்பாடி அணியினருக்கு அழுத்தம் கொடுக்கலாம் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் தினகரன் அணியினர்.

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்’ எனும் வாசகம் யார் பக்கம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV
click me!

Recommended Stories

எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!
விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு