மத்திய பெண் அமைச்சருக்கே பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்…. உரித்தெடுத்த போலீசார் !!  

Asianet News Tamil  
Published : Jun 13, 2018, 11:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
மத்திய பெண் அமைச்சருக்கே பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்…. உரித்தெடுத்த போலீசார் !!  

சுருக்கம்

3 young men tease central lady minister in UP

பாஜக  கூட்டணியில் உள்ள மத்திய பெண் அமைச்சர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று இளைஞர்களை உத்தர பிரதேச போலீசார் கைது உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் நேற்று முன்தினம் உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவரது சொந்த தொகுதியான மிர்சாபூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் வாரணாசிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் அமைச்சர் அனுப்ரியா படேல் சென்ற காரை பின் தொடர்ந்து 3  இளைஞர்கள் மற்றொரு காரில் சென்றனர். நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் வந்த 3 பேரும்  அவரது காரை முந்த முயன்றனர்.

இதனை பார்த்த அமைச்சரின் பாதுகாவலர்கள் அவர்கள்  மூவரையும் எச்சரித்தனர். ஆனால் அதை அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்து மத்திய அமைச்சர் அனுப்ரியா பட்டேலை கிண்டல் செய்து பேச தொடங்கினர்.

மேலும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசத்தொடங்கிய அவர்களை, அமைச்சரின் பாதுகாவலர்கள் எச்சரித்தும், அந்த இடத்தை விட்டு போகமால் தொடர்ந்து அனுப்ரியாவை கிண்டல் செய்தனர்.. 

மத்திய பெண் அமைச்சருக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இளைஞர்களை  மடக்கி பிடித்தனர். அவர்கள் யார் என்ற விவரஙக்ளை வெளிவராத நிலையில், தொடர்ந்து அவர்களிடம்  வாரணாசி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!