தமிழக தமிழக பிஜேபியில் கோஷ்டி மோதல்!! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...

By sathish kFirst Published Sep 24, 2018, 5:21 PM IST
Highlights

அரசியல் கட்சிகளுக்கிடையே சண்டை சச்சரவுகள் வருவது என்பது சகஜமான ஒன்று. ஆனால் சமீபகாலமாக தமிழக அரசியல் கட்சிகள் இடையே இது போன்ற சண்டைகள் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே நடந்துவருகின்றன. 

அரசியல் கட்சிகளுக்கிடையே சண்டை சச்சரவுகள் வருவது என்பது சகஜமான ஒன்று. ஆனால் சமீபகாலமாக தமிழக அரசியல் கட்சிகள் இடையே இது போன்ற சண்டைகள் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே நடந்துவருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுகவில் வெளிப்படையேகவே மோதிக்கொள்கின்றனர் அமைச்சர்களும் , மந்திரிகளும். 

சமீபத்தில் கூட அதிமுகவில் நடைபெற்ற மாவட்ட செயலர்கள் கூட்டத்தின் போது கூட  எடப்பாடியின் முன்னிலையிலேயே மோதிக்கொண்டனர் முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமியும், தற்போதைய அமைச்சர், வேலுமணியும்.
அது மட்டுமில்லாமல் எக்கச்சக்கமான உள்பிரிவினைகள் வேறு கட்சிக்குள் நிலவுகிறது. முதலவர் என்றும் பாராமல் கருணாஸ் எடப்பாடியை பற்றி பேசியது அமைச்சர்களே முதல்வரை எதிர்த்து பேசுவது என தாறுமாறாக பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது அதிமுகவில். 

இதே போல தான் திமுகவிலும் அழகிரி மற்றும் ஸ்டாலினுக்கு இடையேயான மோதலும் அமைந்திருக்கிறது. 
மற்ற கட்சிகள் எப்படி இருந்தாலும் தமிழகத்தில் இதுவரை சண்டை போட்டுக்கொள்ளாமல் மிகவும் ஒற்றுமையாக இருந்து வந்தது பிஜேபி தான். 

அரசியலில் பெரிய அளவில் தமிழக பிஜேபி எதையும் சாதிக்கவில்லை என்றாலும், கட்சியில் அனைவரும் நகமும் சதையுமாக ஒற்றுமையுடன் இருக்கின்றனர் என்ற நற்பெயரை பெற்றிருந்தது தமிழக பிஜேபி. ஏதாவது எடக்கு மடக்காக பேசி எச்.ஏ.ராஜா அவ்வப்போது மாட்டிக்கொள்ளும் போதெல்லாம் துணை நிற்பார்கள் தமிழிசையும் , எஸ்.வி.சேகரும். 

அதே போல எஸ்.வி.சேகரை பிடிக்க சிபிஐ வந்தால் கூட அரணாக நின்று காத்திடுவார்கள் தமிழிசையும், எச்.ராஜாவும். தமிழிசைக்கு ஒன்று என்றால் எங்கு தலைமறைவாகி இருந்தாலும், முதலில் குரல் கொடுத்துவிடுவார்கள் எஸ்.வி.சேஎகரும், எச்.ராஜாவும்.. இப்படி பாசப்பறவைகளின் கூடாக இருந்துவந்த பிஜேபியின் யார் எறிந்த கல் பட்டதோ தெரியவில்லை . 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய  எஸ்.வி சேகர், பாஜக தலைமை என்னை பயன்படுத்திக் கொள்ளவில்லை. எப்போதும் என்னை யாராவது பயன்படுத்திக் கொண்டால் நல்லது. அவர்களுக்கு அது நன்மை பயக்கும். இல்லையென்றால் அவர்களுக்குத்தான் அது பிரச்சனை ஆகும். எனக்கு அதில் நஷ்டம் இல்லை. தமிழக பிஜேபி தலைமையை நான் ஏற்க வேண்டுமா என்று பிறகு பேசலாம். முதலில் பிஜேபி என்னை ஏற்க வேண்டும்.

அப்படி ஒருவேளை தலைமையை ஏற்க வேண்டும் என்ற ஒரு சூழல் வந்தால் கண்டிப்பாக பிஜேபி  தலைமையை நான் ஏற்றுக்கொள்வேன். இப்போது இருக்கும் வாக்கு வங்கியை விட அதிக வாக்குகளை நான் வாங்கி காட்டுவேன். தமிழிசை வீட்டு வாசலில் நின்று தங்கச்சி நான் வந்துட்டேன் என்று சொல்லட்டுமா? தமிழிசையின் பதவிக்கு ஆப்படிக்கும் விதமாக பேசியிருந்தார்.

இதற்க்கு பதிலடி கொடுத்த தமிழிசை, இதற்கு பதில் சொல்றத விட சிரிச்சுட்டு விட்டுறலாம். ஏனென்றால், பல சிரிப்பு நாடகங்களில் நடித்து நடித்து அதே மாதிரி ஒரு நாடகத்தில் பேசுகிறோம் என்று நினைத்து பேசியிருப்பாரோ என்னவோ? என்றும், தமிழக பிஜேபி தலைவர்  பதவி என்றால் அவ்வளவு இலகுவான விஷயமா? என்றும் அவர் கூறினார். கடந்த காலங்களில் ஒருவருக்கொருவர் முட்டுக் கொடுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்த தமிழக பிஜேபி தலைவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிப் பேசி வருவதால் தற்போது உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் பனிப்போர் ஏற்படலாம் எனும் தர்மசங்கசமான சூழலில் சிக்கி இருக்கிறது தமிழக பாஜக.

click me!