எம்.எல்.ஏ கருணாஸ் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

By vinoth kumarFirst Published Sep 24, 2018, 4:14 PM IST
Highlights

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, நாளை மறுநாள் விசாரணை நாளை மறுநாள் வர உள்ளது.

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, நாளை மறுநாள் விசாரணை நாளை மறுநாள் வர உள்ளது. எம்.எல்.ஏ. கருணாஸ், அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், காவல் துறை மற்றும் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியிருந்தார். 

அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், கருணாசின் அவதூறு பேச்சை அடுத்து, நீதிபதிமுன் ஆஜர்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். 

கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த இளைஞர்கள் கண்டனம் தெரிவித்தும், 
ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருணாஸ் கைதுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ஆதரவு கருத்துக்களும் கூறி வந்தனர். இந்த நிலையில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ் தரப்பு வழக்கறிஞர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தாம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 26 ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

click me!