திமுக - அதிமுக இடையே மோதல்...! வாக்கு எண்ணிக்கை தற்காலிக நிறுத்தம்...

 
Published : Dec 24, 2017, 09:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
திமுக - அதிமுக இடையே மோதல்...! வாக்கு எண்ணிக்கை தற்காலிக நிறுத்தம்...

சுருக்கம்

Fight between DMK and ADMK at during By election counting

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக அதிமுக இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர்  21ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என ராவும் பகலும் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

இதையடுத்து கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி சொன்னபடி ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. 

தேர்தலை முறைப்படி நடத்த 15 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப்படை பாதுகாப்புக்காக வந்திருந்தது. 

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். 1,638 வாக்குச் சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

ஓட்டுப்பதிவு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 

இதில், முதல் சுற்றில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில்  அதிமுகவை சேர்ந்த மதுசூதனன் உள்ளார். மூன்றாம் இடத்தில் திமுக மருதுகணேஷ் உள்ளார். பாஜக  4 வ்து இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக அதிமுக இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை நிறுத்த அதிமுக முயற்ச்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!