அதிமுகவுக்கு பயம்... அண்ணாமலைக்கு ஜோக்கு... கடுப்பான கனிமொழி..!

Published : Oct 02, 2021, 05:10 PM IST
அதிமுகவுக்கு பயம்... அண்ணாமலைக்கு ஜோக்கு... கடுப்பான கனிமொழி..!

சுருக்கம்

திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து அதிமுக பயப்படுகிறது என தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி., யும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி தெரிவித்தார்.

திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து அதிமுக பயப்படுகிறது என தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி., யும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆட்சியில் இருக்கும் போது எதையும் செய்யாத அதிமுக, திமுக செய்வதை பார்த்து பயப்படுகின்றனர். அந்த பயத்தின் வெளிப்பாடு காரணமாக திமுக எதையும் செய்யவில்லை என்று அதிமுக கூறுகின்றனர்.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக செய்யாததை திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே முதல்வர் முக ஸ்டாலின் செய்துள்ளார். திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்கு பதிலாக இருக்கும். தமிழகத்தில் உள்ள அரசு கேபிள் டிவிக்கு சொந்தமான ஆதார் மையங்களில் பணி புரியக்கூடிய பெண்களுக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டு பணி நிறுத்தம் செய்யப்படுவதாக எழுந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவின் அடித்தளம் நன்றாக அமையவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவது நகைச்சுவையாக உள்ளது’’ என அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!