சபரிமலைக்கு செல்ல முடிவு செய்த ஃபாத்திமா ரஃஹானா ! பாதுகாப்பு தர போலீஸ் மறுத்ததால் அதிர்ச்சி !!

Published : Nov 25, 2019, 08:15 AM IST
சபரிமலைக்கு செல்ல முடிவு செய்த ஃபாத்திமா ரஃஹானா ! பாதுகாப்பு தர போலீஸ் மறுத்ததால் அதிர்ச்சி !!

சுருக்கம்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல விரும்பிய பாத்திமாவுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.. ,இதையடுத்து அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.  

கேரளாவைச் சேர்ந்த, ஃபாத்திமா ரஃஹானா, கடந்த ஆண்டு சபரிமலை வந்தார். பம்பையில் இருந்து, போலீஸ் ஜாக்கெட் அணிந்து, பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். சன்னிதானம் நடைப்பந்தல் அருகே, பக்தர்களின் கடுமையான எதிர்ப்பால் திரும்பி சென்றார். 

அவர் விட்டுச் சென்ற இருமுடி கட்டை பார்த்த போது, வழிபாட்டு பொருட்களுக்கு பதிலாக, கொய்யாப்பழம் முதலிய பொருட்கள் இருந்தன. இது, பெரும் விவாதத்தை கிளப்பியது. அவர் பணிபுரிந்த பி.எஸ்.என்.எல்., அவரை, 'சஸ்பெண்ட்' செய்தது. 

அது மட்டுமல்லாமல் சிலர் அவர் போஸ் கொடுத்த ஆபாச படங்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வந்தனர். அது இன்னும் தொடர்கிறது.தொடர்ந்து, மத உணர்வுகளை புண்படுத்தியதாக, கைது செய்யப்பட்டார்; அவர் மீது வழக்குகள் நடக்கின்றன.


இந்நிலையில், இந்த ஆண்டும் சபரிமலை செல்லப் போவதாகவும், அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி, கொச்சி போலீஸ் துணை ஆணையரிடம் மனு கொடுத்தார். 

ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த காவல்துறை, கோர்ட் உத்தரவுடன் வந்தால் மட்டுமே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்தது. இதையடுத்து  , ஃபாத்திமா ரஃஹானா தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி நீமின்றம் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!