விவசாய சங்கங்களின் கூட்டமாக சுருங்கிப்போன அனைத்துகட்சி கூட்டம்

Asianet News Tamil  
Published : Oct 14, 2016, 03:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
விவசாய சங்கங்களின் கூட்டமாக சுருங்கிப்போன அனைத்துகட்சி கூட்டம்

சுருக்கம்

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விரைவில் பிரதமரை தேவைப்பட்டால் ஜனதியையும் சந்திப்பேன் என்று தஞ்சாவூர் கூட்டத்தில் சூளுரைத்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதில் சுணக்கம் ஏற்பட்டதால் தற்போது அனைத்து கட்சி கூட்டத்தை அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமாக சுருக்கி நடத்தினார்.

காவிரி பிரச்சனை தமிழகத்தில் தலைவிரித்தாடும் நிலையில் பல்வேறு போராட்டங்கள் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தர்விட்ட பின்னரும் கர்நாடகா மதிக்காமல் சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியதும் அங்குள்ள கட்சிகள் ஒற்றுமையாக ஓரணியில் நின்றதும் அவர்கள் கோரிக்கையை வலுப்பெற செய்தது. 

மறுபுறம் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசும் மோடியும் எடுத்ததால் மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தில் திடீரென பல்டி அடித்து எதிரான நிலை எடுத்தனர். பாராளுமன்றத்தின் அவைகளை கூட்டி சட்டம் நிறைவேற்றப்போவதாக தெரிவித்தனர். 

தமிழகத்தில் பிரிந்து கிடக்கும் அரசியல் கட்சிகள் தனித்தனியே போராட்டம் நடத்தினர். அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக கூட்டவில்லை என்ற ஒரே வரியை போகும் இடமெல்லாம் சொல்லிகொண்டிருந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். பின்னர்  தஞ்சாவூரில் விவசாய சங்கத்தினர் நடத்திய உண்ணாவிரதத்தில்   கலந்து கொண்டு பேசியபோது  திடீரென திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் ஒத்தகருத்துள்ள கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களை அழைத்து கொண்டு டெல்லி சென்று பிரதமரை தேவைப்பட்டால் ஜனாதிபதியையும் சந்திப்பேன் என்று கூறினார். 

அதன் பின்னர் நடந்த கதைகள் திமுக ஏன் தான் இந்த முடிஅவை எடுத்ததோ என்று எண்ணும் அளவுக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்ப துவங்கின. பாஜக , விசிக  திருமாவளவன் ,  மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ  ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்தனர். 

 வாசன் வருவதாக இல்லை , ராமதாஸ் பதில் சொல்லவில்லை,  முக்கிய கட்சிகள் எதுவும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு வர தயாராக இல்லை என்பது தெளிவானது.  இதனால் தற்போது சிறிய கட்சிகளையும், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்துக்கொண்டு என்ன அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமர் ஜானாதிபதியை பார்க்கப்போகிலாமா என்ற  எண்ணத்தில் இருந்த  மு.க.ஸ்டாலின் தற்போது அதையும் சுருக்கி அனைத்து கட்சிகளின் விவசாய சங்கதலைவர்களை அழைத்து இன்று கூட்டம் நடத்தினார்.

 இதிலும் சில விவசாய சங்கங்கள் , கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்துக்கு அழைப்பு வந்தால் செல்வோம் என காங்கிரஸ் கட்சி அறிவித்ததால் கடைசி நேரத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் விவசாய பிரிவை சேர்ந்த பவன் குமார் கலந்துகொண்டார், அனைத்துவிவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன், இடதுசாரி கட்சிகளின் சார்பில் விவசாய சங்க தலைவர்கள் சண்முகம் , குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்  , துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரதமரை சந்திக்க பிரதிநிதிகளுடன் செல்வது, உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்ட வேண்டும்வாது உள்ளிட்ட 2  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

CM Vijay-ஐ சந்திக்கும் மாணவர்கள்? : எப்போது? ஏன்? சூப்பர் அறிவிப்பு இதோ!
TN Politics: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா! தவெகவில் ஐக்கியம்! அடுத்து என்ன நடக்கும்? பெரும் ட்விஸ்ட்!