
சர்ச்சைகளுக்கு அஞ்சாதவர் காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்….
உள்கட்சியானாலும் சரி, மாற்றுக்கட்சியானாலும் சரி தனது அதிரடி பேச்சால் ஏராளமான அரசியல் எதிரிகளை அள்ளிக்குவித்திருப்பவர் தான் ஈ.வி,கே.எஸ்.
ஏற்கனவே ஒரு முறை முதலமைசச்ர் ஜெயலலிதா பற்றி தகாத வார்த்தைகளால் பேசியதால் மிக பெரிய சிக்கலுக்கு ஆளானார் ஈ.வி,கே.எஸ்..
அதிமுக தொண்டர்கள் அவருக்கு எதிராக சுமார் 4 நாட்கள் வரை தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி அதிர வைத்தனர்.
கடைசி வரை பயப்படாத ஈ.வி,கே.எஸ்.இளங்கோவன் ஒரு கட்டத்தில் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
பின்னர் உள்கட்சியை சேர்ந்த விஜயதாரணி, சிதம்பரத்தின் ஆதரவாளர் விஜய் இளஞ்செழியன் ஆகியோருடன் நேருக்கு நேர் மோதினார்.
இப்படி எதைப்பற்றியும் யாரை பற்றியும் கவலைப்படாமல் அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற ஈ.வி,கே.எஸ்.இளங்கோவன் மற்றுமொரு சர்ச்சையில் தற்போது சிக்கியுள்ளார்.
இரு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் தனது 4 வயது மகனின் பிறந்தநாளையொட்டி ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் ஆசிர்வாதம் வாங்க அழைத்து சென்றார்.
அப்போது, அந்த சிறுவனிடம் இனிப்பை வாங்கும்போதும், அச்சிறுவனை மடியில் அமர்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போதும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தன் கைகளில் பற்ற வைக்காத சிகரெட்டை வைத்திருந்தார்.
இது புகைப்படமாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்ட அதிமுக தொண்டர்கள் சிலர் ஒரு அடிப்படை நாகரீகம் கூட தெரியாத ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு சிறு குழந்தையின் மனதில் நஞ்சை வார்க்கும் வகையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பற்ற வைக்காத சிகரெட்டுகளை கையில் வைத்துள்ளார்.
இவரல்லவா தமிழகத்தில் மது விலக்கு என்ற ஒழுக்க கொடியை பிடித்தார்.
இவருக்கு என்ன தகுதி இருக்கிறது மது விலக்கு பற்றி பேசுவதற்கு என கமெண்டுகளை பறக்க விட்டுள்ளனர்.
கடைசிவரை ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகரெட் பற்ற வைத்தாரா பற்றை வைக்கவில்லையா என்பது அவருக்கே வெளிச்சம்.