
அரசியல் அரசியல் என்று வெகு காலமாக ரசிகர்களுக்கு போக்கு காட்டி வந்த ரஜினி காந்த், இன்று தனது முடிவை அதிரடியாய் அறிவித்தார். தான் தனிக்கட்சி தொடங்கி ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து களம் காணப் போவதாகக் கூறினார். இதைக் கேட்டதும், ரசிகர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள வந்த ரசிகர் ஒருவருக்கு சந்தோஷ மிகுதியில் திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த கடந்த 6 நாட்களாக சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகிறார். அவரது இந்த வருட ரசிகர் சந்திப்பின் கடைசி நாள் இது. இன்றைய தினத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் இன்று காலை பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வர உள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட போவதாகவும் அறிவித்தார். தனது ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து, களம் காணப் போவதாகக் கூறினார்.
அவர் சொன்னதைக் கேட்டதும், ரசிகர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள வந்த ரசிகர் ஒருவருக்கு சந்தோஷ மிகுதியில் திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பிறகு அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார்.