முத்தத்தால் கொரோனாவை விரட்டுவதாக சாமியார் செய்த அட்ராசிட்டி..!! 24 பேருக்கு கொரோனா, சாமியாருக்கும் சங்கு..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 13, 2020, 11:43 AM IST
Highlights

தனது முத்தத்தால் கொரோனாவையே விரட்டுவேன் என்று கூறிவந்துள்ளார். இந்நிலையில் முத்த பாபா திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். 

தன்னிடம் வந்த பக்தர்களுக்கு முத்தம் கொடுத்த சாமியாரால் 24 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சாமியாரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது,  உலக அளவில் வைரஸ் பாதித்த  நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடம் பெற்றுள்ளது, கடந்த ஒரு சில வாரங்களில் இந்தியாவில் நோய்த்தொற்று அதிகரித்ததன் காரணமாக இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், உள்ளிட்ட நாடுகளை முந்திச் சென்று நான்காவது இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 9 ஆயிரத்து 603ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8,890 பேர் உயிரிழந்துள்ளனர் இந்நிலையில் நாட்டிலேயே அதிக கொரோனா தொற்று இருக்கும் மாநிலங்களில் ஏழாவது இடத்தில் மத்தியபிரதேசம் உள்ளது. வெள்ளிக்கிழமை கணக்குப்படி 10,443 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7,201 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இன்னும் 2,802 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சுமார் 440 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இங்குள்ள ரத்னம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் அஸ்லாம் பாபா, அவரை அப்பகுதி மக்கள் "முத்த-பாபா" என அழைத்து வந்தனர். தங்களுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் பாபாவிடம் ஒரு முத்தம் வாங்கினால் அது குணமடைந்து விடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் பாபாவின் முத்த சேவை தொடர்ந்து நடைபெற்றுவந்தது. 

தன்னை சந்திக்க வரும் பக்தர்களுக்கு கையில் ஒரு முத்தம் கொடுத்து ஆசிகளை வழங்கி வந்தார் பாபா. இந்நிலையில் பாபாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, அது அவருக்கு தெரிந்தும் அவர் முத்தம் கொடுப்பதை  நிறுத்தவில்லை, மாறாக தனது முத்தத்தால் கொரோனாவையே விரட்டுவேன் என்று கூறிவந்துள்ளார். இந்நிலையில் முத்த பாபா திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாபவிடம் முத்தம் பெற்ற அனைவரும் கலக்கம் அடைந்தனர். பாபவிடம் முத்தம் பெற்றவரைகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சுமார் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 84 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  ஊரடங்கு நடைமுறையிலிருந்தும் பாபாவிடம் ஆசி பெற மக்கள் கூடியதை கண்டுகொள்ளாத உள்ளூர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது. 

 

click me!