"எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தாலும் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க அவசியமில்லை" - முன்னாள் ஆளுநர் ரோசய்யா 'பளீர்' கருத்து

 
Published : Feb 10, 2017, 06:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
"எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தாலும் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க அவசியமில்லை" - முன்னாள் ஆளுநர் ரோசய்யா 'பளீர்' கருத்து

சுருக்கம்

எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மையினர் ஆதரவு கடிதத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா வைத்திருந்தாலும், அவரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்று முன்னாள் ஆளுநர் ரோசய்யா கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு

தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் அரங்கேறி இருக்கிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடி, சட்டசபைத் தலைவராக வி.கே. சசிகலாவை தேர்வு செய்து, முதல்வராக அமர்த்த உள்ளனர். 

அதே சமயம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி,  முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியினர் செயல்படுகின்றனர்.

இருபிரிவினரும் தனித்தனியாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்துள்ளதால், அடுத்த யார் ஆட்சி அமையும்? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா தமிழக அரசியலில் நிலவும் அசாதாரண நிலை குறித்து தெரிவித்த கருத்தில் கூறியிருப்பதாவது-

மத்தியஅரசு

தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் கையொப்பத்துடன் இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவுக்கு அழைப்பு விடுப்பாரா? அல்லது, முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாய்ப்பு அளிப்பாரா? என்பது மத்திய அரசின் ஆலோசனைகளைப் பொறுத்தே அமையும்.

இதுபோன்ற அசாதாரண சூழலில் மத்திய அரசிடம் இருந்து ஆலோசனைகள் பெற்றே செயல்படுவார்.

அவசியம் கிடையாது

அதேசமயம், ஆளூநர் எந்த முடிவையும் எடுக்கலாம். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வைத்து இருக்கும் வி.கே.சசிகலாவைக்கூட ஆட்சி அமைக்க அழைக்காமல் இருக்கலாம்.

இது ஆளுநரின் அதிகாரம். ஏனென்றால், இப்போது சூழல் இயல்பான நிலையில் இல்லை. அசாதாரன நிலையில் இருக்கிறது.

ஆதலால், ஆளுநர் எந்த விதமான முடிவு எடுக்கப்போகிறார் என்பது தெரியாது. ஆனால், மத்திய அரசு அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில்தான் ஆளுநர்வித்யாசாகர் ராவ் முடிவு எடுப்பார்.

காலம் தாழ்த்து

எந்த முடிவையும் விரைவாக எடுத்தால், கடும் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்பதால்தான் ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலம் தாழ்த்துகிறார்.

இந்த விசயத்தில்ஆளுநர் தன்னிச்சையாக செயல்படமுடியாது என்பதால், நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்துகிறார்.

ஓ.பி.எஸ்க்கு வாய்ப்பு

அதேசமயம், ஆளுநர் நினைத்தால், முதல்வர் பன்னீர் செல்வத்தை தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்கக் கோரி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பும் விடுக்கலாம்.

அவரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் கருத்தை அவர் அறிந்து, ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறமுடியும்

இவ்வாறு  அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு