Exclusive: சி.ஏ.ஏ போராட்டத்தை எதிர்க்கும் இஸ்லாமிய தலைவர்... எஸ்.டி.பி.ஐ கொலை செய்ய சதி..!

By Thiraviaraj RMFirst Published Feb 27, 2020, 10:19 AM IST
Highlights

கர்நாடக மாநிலம், உடுப்பி, சிக்மங்களூரு, மற்றும் கேரள மாநிலம், கசரகோடு ஆகிய இடங்களில் உள்ள தக்‌ஷினா கன்னடா மவுல்வி அமைப்பில் ஹாசியாக இருப்பவர் தவாஹா அஹமது. 

கர்நாடக மாநிலம், உடுப்பி, சிக்மங்களூரு, மற்றும் கேரள மாநிலம், கசரகோடு ஆகிய இடங்களில் உள்ள தக்‌ஷினா கன்னடா மவுல்வி அமைப்பில் ஹாசியாக இருப்பவர் தவாஹா அஹமது. 

முஸ்லீம் சமூக மக்களிடையே சக்தி வாய்ந்தவர்.  இதற்கு முன் இந்த அமைப்பில் ஹாசியாக இருந்தவர் இவரது மாமா  அப்துல்லா செம்பரிகா மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.  அவருக்கு பிறகு ஹாசியாக தவாஹா அஹமது பதவி ஏற்றுக் கொண்டார். 

2019 டிசம்பர் 19 அன்று மங்களூர் அருகே கேரளாவில் நடந்ததைப் போல கர்நாடகாவில் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக போராட வேண்டாம் என்று முஸ்லிம்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். காஜி தனது வேண்டுகோளாக ஒற்றுமையான இந்தியா உருவாக வேண்டும் என ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளையும் கேட்டுக் கொண்டிருந்தர். பங்களாதேஷ் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவி இங்கு அமைதியையும் ஒழுங்கையும் சீர்குலைக்கிறார்கள். ஆகையால், ஊடுருவல்காரர்களை விரட்டி அடிப்பது முக்கியம். 

ஒட்டுமொத்தமாக அவரின் நல்ல நோக்கம் நாட்டில் அமைதியைக் காத்துக்கொள்வதும், என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ- போராட்டத்திற்கு எதிராகவும் இருந்தது. இந்தப்போராட்டங்கள் அமைத்திக்கும் நாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் என்பது அவரது கருத்து. 

ஆனால், காஜியின் பேச்சை சித்தரித்து கேரளாவில் கசராகோடு பகுதியில் ஒளிபரப்பாகும் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் மலையாள எஸ் நியூஸ் விஷன் டிவியில், ‘காஜி ஒரு  ஆர்எஸ்எஸ் முகவராக செயல்பட்டு முஸ்லிம்களைப் பிளவுபடுத்தி வருகிறார்’என அவதூறாக ஒளிபரப்பியது. இதனையடுத்து எஸ்டிபிஐ அமைப்பினர் ஹாஜிக்கு பலமுறை மிரட்டல் விடுத்து சிலமுறை கொலை செய்யவும் முயன்றுள்ளனர். 

இது தொடர்பாக காஜி, மங்களூரு கத்ரி காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இப்போது டி.ஜி., ஐ.ஜி.பி மற்றும் மங்களூர் கமிஷனரிடம் தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு கொடுத்துள்ளார். காஜியின் மகன் ஹுசைன் அவதூறு பரப்பிய எஸ் நியூஸ் விஷன் சேனல் மீது எஃப்.ஐ.ஆர் செய்துள்ள நகலையும் வெளியிட்டுள்ளார். 

இஸ்லாமிய குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் பேசியதை அவதூறாக சித்தரித்து பொய் செய்திகளைப் பரப்பிய வஞ்சகர்களுக்கு எதிராக முஸ்லிம் மத்திய குழு புகார் அளித்தது. இந்நிலையில், முஸ்லிம் மத்திய குழுத் தலைவர் மசூத் மற்றும் துணைத் தலைவர் இப்ராஹிம் கோடிஜால் ஆகியோருக்கு அச்சுறுத்தல்கள் வருவதாக பகீர் புகார் தெரிவிக்கின்றனர். அமைதி மற்றும் அகிம்சை வேண்டுகோள் விடுத்துள்ளதால் அவர்களை எஸ் டி.வி, காவல்துறையினரில் ஷூ நக்கிகள் என அந்த சேனல் அவமானப்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து  காஜியின் நேரடி உதவியாளராகவும், சிஏஏ போராட்டத்திற்கு எதிராகவும் உள்ள, அப்துல் ரசாக், ஹாஜியை கொல்ல பல முறை சதி நடந்துள்ளது. அவரது கார் ஓட்டுநரை வைத்தே ஒருமுறை கொல்லப்பார்த்தார்கள்’’என அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். 

click me!