சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது... வேலூர் சிறையில் அடைப்பு..!

By Thiraviaraj RMFirst Published Feb 27, 2020, 8:45 AM IST
Highlights

வீட்டை அபகரிக்க முயன்றதாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது ஒரு பெண் புகார் அளித்ததன் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 

வீட்டை அபகரிக்க முயன்றதாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது ஒரு பெண் புகார் அளித்ததன் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சேலத்தில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பியூஸ் மானுஷ் மீது சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த ஆஷா குமாரிக்கு சேலத்திலும் வீடு உள்ளது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது மகள் - மருமகனுடன் வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பியூஸ் மானுஷ் மீது கொடுத்த புகார் மனுவில் சேலம், கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டியில், எங்கள் வீடு உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷை ஒப்பந்த அடிப்படையில் எங்கள் வீட்டில் குடியேறினார்.

கடந்த, 2017 ஏப்ரலில் பியூஸ் மானுஷிடம் வீட்டை காலி செய்ய அறிவுறுத்தினோம். அவர் வீட்டை காலி செய்ய மறுத்து மிரட்டினார். வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். போலீஸ், முதல்வர் தனிப்பிரிவு, பிரதமர் வரை புகார் அனுப்பினேன். 'சிவில் பிரச்னையில் தலையிட முடியாது' என ஒதுங்கிக் கொண்டனர்’’ எனத் தெரிவித்துள்ளார். சேலத்தில் முகாமிட்டுள்ள, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆஷா குமாரி புகார் வழங்கினார்.  அவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதை அடுத்து பியூஸ் மானுஷை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
 

click me!