தமிழகம் முழுவதும் அதிரடியாக உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டணம்... நள்ளிரவு முதல் அமல்..!

Published : Apr 01, 2021, 12:52 PM IST
தமிழகம் முழுவதும் அதிரடியாக உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டணம்...  நள்ளிரவு முதல் அமல்..!

சுருக்கம்

 சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.   

தமிழகம் முழுவதும் 26 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டண உயர்ந்துள்ளது எனவும் நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

 

 கார், ஜீப், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு 80 ரூபாயாக இருந்த கட்டணம் 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 85 ரூபாயாக உள்ளது. இரண்டு அச்சு கனரக வாகனம் மற்றும் பேருந்திற்கு 270 ரூபாய் இருந்த கட்டணம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 290 ரூபாயாக உள்ளது.மூன்று அச்சு கனரக வாகனங்களுக்கு 295 ரூபாயாக இருந்த கட்டணம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 315 ரூபாயாக உள்ளது.மூன்று முதல் ஆறு அச்சு கொண்ட கனரக வானங்களுக்கு 425 ரூபாயாக இருந்த கட்டணம் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 450 ரூபாயாக உள்ளது. 7 மற்றும் அதற்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு 520 ரூபாயாக இருந்த கட்டணம் 30 ரூபாய் உயர்த்தப்பட்டு 550 ரூபாயாக உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!