கொரோனாவை செம்மையா டீல் பண்ணீங்க மோடி ஜி.. பாராட்டி தள்ளிய அமெரிக்க நாடாளுமன்ற குழு.

By Ezhilarasan BabuFirst Published Nov 13, 2021, 3:46 PM IST
Highlights

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்கா தூத்துக்குடிவினருக்கு இடையேயான இச்சந்திப்பு இரு  நாடுகளுக்குமிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என்பதையும் அவர்கள் அப்போது பகிர்ந்து கொண்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க செனட் சபை  உறுப்பினர் ஜான் கார்னன் தலைமையிலான அமெரிக்க நாடாளுமன்ற குழு உறுப்பினர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா கொரோனா வைரஸை மிக சிறப்பாக கையாண்டது என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்  வெகுவாக பாராட்டியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு இந்திய பிரதமராக மோடி பதவி ஏற்றது முதல் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ட்ரம்ப் அதிபராக இருந்தபோதும் சரி, தற்போது ஜோ பைடன் ஆட்சியிலும் சரி, இந்தியா அமெரிக்காவுக்கான உறவு வலுவாக இருந்து வருகிறது. 

அதிபராக ஜோ பைடன் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல் முறையாக பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வெள்ளை மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது துணை அதிபர் கமலா ஹாரிசனை சந்தித்த அவர், இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, செனட் சபை உறுப்பினர் ஜான் காரனின் தலைமையிலான அமெரிக்க நாடாளுமன்றக் குழுவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்தக் குழுவில் செனட் சபை உறுப்பினர்கள் மைக்கேல் கிராப்போ, தாமஸ் டியுபர் வில்லே, மைக்கேல் லீ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டோனி கன்சாலேஸ், ஜான் கெவின் எலிசி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மூத்த செனட் உறுப்பினர் ஜான் கார்னின் இந்தியா மற்றும் இந்திய – அமெரிக்கர்கள் குறித்த செனட் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் இணைத் தலைவர் ஆவார். 

அப்போது இந்தியா அமெரிக்கா இடையேயான கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் அமெரிக்க காங்கிரஸ் தொடர்ந்து ஆதரவு வழங்கிவருவதை பிரதமர் மோடி மனந்திறந்து பாராட்டினார். இது தொடர்பாக இந்திய பிரதமர் அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க செனட் உறுப்பினர்கள், உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா கொரோனாவை மிகச் சிறப்பாக  கையாண்டது என அக்குழு இந்தியாவை பாராட்டியதாக அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொற்றுநோயை எதிர்கொள்வதில் நாட்டின் ஜனநாயக நெறிமுறையின் அடிப்படையில்  மக்களின் பங்கேற்பு முக்கிய பங்கு  வகிப்பதாக பிரதமர் அக்குழுவிடம் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது தெற்காசிய மற்றும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பரஸ்பர  நலன்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் அப்போது வெளிப்படையான, ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்கா தூத்துக்குடிவினருக்கு இடையேயான இச்சந்திப்பு இரு  நாடுகளுக்குமிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என்பதையும் அவர்கள் அப்போது பகிர்ந்து கொண்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது, அதேபோல் இந்தியா அமெரிக்கா ஆகிய இரு தரப்பு உறவை  மேலும் வலுப்படுத்துவதற்கன சாத்தியக்கூறுகள் மற்றும் பயங்கரவாதம், காலநிலை மாற்றம், முக்கிய தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளுதல்  மற்றும் சமகால உலகளாவிய பிரச்சினைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அதில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்தும் கருத்து பரிமாற்றம் நடைபெற்றதாக அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

click me!