ஆடையின்றி உறவினர் வீட்டுக்குள் புகுந்து அலப்பறை செய்த அ.தி.மு.க முன்னாள் எம். பிக்கு முன் ஜாமீன் கொடுத்துள்ளது நீதிமன்றம்
கோவையை அடுத்த குன்னூரை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன். இவருக்கு வயது 55 ஆகும். கடந்த 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று, இரவில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார் கோபாலகிருஷ்ணன். அன்று இரவு, குடிபோதையில் தள்ளாடியபடியே அருகில் இருக்கும் முத்தாலம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள இவரது உறவினரான கோபி என்பவரது வீட்டுக்குள் புகுந்தார்.
undefined
இதனை சற்றும் எதிர்பாராத கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு ஆத்திரமடைந்து தனது மகன் கிஷோருடன் சேர்ந்து அவரை தாக்கினார்கள்.இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது தொடர்பாக குன்னூர் போலீசார் கோபாலகிருஷ்ணன் மற்றும் கோபி மீது வழக்கு பதிவு செய்தனர்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே முன்ஜாமீன் கேட்டு ஊட்டி கோர்ட்டில் கோபாலகிருஷ்ணன் மற்றும் கிஷோர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது முன்ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அந்த மனு விசாரணைக்கு வந்தது. இம்மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா, அதிமுக முன்னாள் எம். பி கோபாலகிருஷ்ணன் கிஷோர் ஆகிய 2 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.