அதிமுகவில் புதிய பதவிகள் !! முன்னாள் அமைச்சர்களுக்கு அடித்தது யோகம்… ஓபிஎஸ்-இபிஎஸ் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Sep 14, 2018, 7:23 AM IST
Highlights

முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, டி.கே.எம்சின்னையா மற்றும் தற்போதைய அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோருக்கு அதிமுகவில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக  வர்த்தகம், கலை அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சரும் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அ.தி.மு.க., விவசாய பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.கே.வைரமுத்து அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவர் ஏற்கனவே வகித்து வரும் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக பதவியில் தொடர்ந்து நீடிப்பார்.

மாநில அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் ப.மோகன், ஆர்.முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ., தூத்துக்குடியை சேர்ந்த என்.சின்னத்துரை, முன்னாள் மத்திய அமைசசர்  செஞ்சி ந.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் எம்.பரஞ்ஜோதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, முன்னாள் எம்.பி., பு.தா.இளங்கோவன் ஆகியோரும், தேர்தல் பிரிவு துணைச் செயலாளராக எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரையும், விவசாயப் பிரிவுத் தலைவராக டி.ஆர்.அன்பழகனும், விவசாயப்பிரிவு செயலாளராக அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியும், விவசாய பிரிவு இணைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் செ.தாமோதரனும், வர்த்தக அணி தலைவராக எம்.எல்.ஏ., அம்மன் கே.அர்ச்சுணனும், செயலாளராக சிந்து கே.ரவிச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கலைப்பிரிவு தலைவராக திரைப்பட இயக்குனர் லியாகத் அலிகானும், செயலாளராக திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரும், இணைச் செயலாளராக திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனும், செய்தித் தொடர்பாளர்களாக நிர்மலா பெரியசாமியும், திரைப்பட இயக்குனர் லியாகத் அலிகானும் நியமிக்கப்படுகின்றனர்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவராக முன்னாள் எம்.பி., ஆ.இளவரசனும், இணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, வி.மூர்த்தி, டி.கே.எம்.சின்னையா ஆகியோரும், துணைச் செயலாளர்களாக எம்.கே.செல்வராஜ், தோப்பு க.அசோகன், பொருளாளராக முன்னாள் அமைச்சர் வரகூர் ஆ.அருணாசலம் ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்.

புரட்சித் தலைவி அம்மா பேரவையின் இணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ. வுமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், பூங்கா நகர் கு.சீனிவாசன் ஆகியோரும், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்களாக அ.சுப்புரத்தினமும், எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏவும், துணைச் செயலாளராக தி.க.அமுல் கந்தசாமி, மகளிர் அணி துணைச் செயலாளராக அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர்களாக கா.லியாகத்அலிகான், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரகீம், முகமது ஜான், சி.டி.சி. அ.அப்துல்ஜப்பார் ஆகியோரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வமும் நியமிக்கப்படுகின்றனர்.

click me!