கடவுள் இருக்கிறார்.. நொந்துபோன எஸ்.பி வேலுமணி .. கோவையில் நடப்பது என்ன?

By Thanalakshmi VFirst Published Nov 26, 2021, 9:45 PM IST
Highlights

கோவை அதிமுக அலுவலகத்தில் , ஒப்பந்தம் போட்ட கட்டுமான பணிகளை செய்ய உத்தரவு போடாவிட்டால் அதிமுக சார்பில் கண்டன் ஆர்பாட்டம் நடத்துவோம் என்று எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்துள்ளார். மேலும் என்னை அரசியலில் இருந்து ஒரங்கட்டும் எண்ணத்தோடு, திமுக செயல்படுகிறதாகவும் பகிரங்க குற்றச்சாட்டியுள்ளார்.
 

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தாலும் , கோவையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக தோல்வியை தழுவியது.தொடரும் அதிமுக பலத்தை முறியடித்து, கோவையை திமுக கோட்டையாக மாற்ற வேண்டும் என்பது திமுக தலைவர்களின் நெடுநாள் கனவாகவே உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் அதிரடி திட்டங்கள் , அறிவிப்பு என களமிறங்கிய் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் திமுகவை நிலை நிறுத்த , கட்சி நிர்வாகிகளுடன் அலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடித்த திமுக, வரும்போகும் நகர்புற தேர்தலிலும் வெற்றியை தட்டி பறிக்கும் முனைப்புடன் செயல்படுகிறது. குறிப்பாக கோவை மாநகராட்சியை  கைபற்றும் எண்ணத்துடன் பல்வேறு கட்ட அரசியல் காய்நகர்தல் வேலைகளிலும் திமுக அரசு ஈடுப்பட்டு வருகிறது. அதனடிபடையில், கோவை மாவட்ட பொறுப்பாளராக மின்சாரதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தேர்தல்பணிகளை தீவிரமாக செய்துவருவதோடு, மக்கள் சபை எனும் திட்டத்தை தொடங்கி மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் கோவை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின், வழி நெடுகிலும் கோவை மக்களின் வரவேற்பு தன்னை திக்குமுக்காட வைத்ததாகவும் , நிகழ்ச்சி நடத்த சொன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மாநாடு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றும் பேசி மேடையை அதிர வைத்தார். மேலும் அரசு விழாவிற்கு வந்துள்ளதால் அரசியல் பேசவில்லை விரும்பவில்லை என்று கூறிய அவர், கோவை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை அரசு புயல் வேகத்தில் செயல்படுத்துவதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் பேச்சு, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்பு , அதிமுக எம்.எல்.ஏ க்கள் புறகணிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரசியல் களத்தில் பெரும் பேசுப்பொருளாக மாறி போனது. மேலும் சமுக வலைதளங்களில் welcomestalin மற்றும் Goback stalin போன்ற ஹஸ்டேக்குகளும் டிரெண்டாகின.

இந்நிலையில் கோவை அதிமுக அலுவலகத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 10 ஆண்டுகளில் கோவைக்கு தேவையான திட்டங்களை நாங்கள் செய்து உள்ளோம் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை நடத்தி பொதுமக்களிடம் மனு வாங்கியது ஆரோக்கியமான செயல் என்றும் அவர் கூறினார். மேலும் கோவையில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த சாலைகளை திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,  ஏதாவது ஒரு வழக்குப் போட்டு கைது செய்ய வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளதாவும் அவர் கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போடுகிறார்கள் என கூறிய அமைச்சர், என் மேல் அதிகமான வழக்குகள் போடப்பட்டு உள்ளது என்றார். மேலும் என்னை எப்படியாவது அரசியலை விட்டு விலக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திமுக செயல்படுகிறது என்று குற்றச்சாட்டியவர், நீதியரசரை கடவுளாக நம்புகிறோம். என்மேல் எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் சந்திக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கோவை மாவட்டத்தை நீங்கள்  புறக்கணிக்காதீர்கள் . ஒப்பந்தம் போட்ட 300 சாலைகளை போடுவதற்கு உத்தரவு போடாவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம்  என்று கூறினார். 

click me!