கோயில் நிலத்தை ஆட்டையை போட்ட முன்னாள் அமைச்சர்.. டேரக்டா முதல்வரின் தனிப்பிரிவுக்கு சென்ற புகார்..!

By vinoth kumarFirst Published Jun 17, 2021, 5:00 PM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து வணிகள வளாகங்கள் கட்டுவதாக முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து வணிகள வளாகங்கள் கட்டுவதாக முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கவுரி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமாக 142 ஏக்கர் 8 சென்ட் இடம் சிவகங்கையில் உள்ளது. இந்த இடத்தில் சர்வே எண் 335 மற்றும் 330ல் உள்ள சுமார் 11 ஏக்கர் நிலத்தை முன்னாள் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சராக இருந்த பாஸ்கரன் மற்றும் அவரது மகன் பாலா மற்றும்  உறவினர்கள் போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்து அபகரித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக இடத்தை அபகரித்து அதில் கம்பி அமைத்து மிகப்பெரிய வணிக வளாகம் கட்டி வருகிறார். மேலும், அக்கட்டிடத்திற்கு விதிமுறைகளை மீறி மின் இணைப்பு பெற்றுள்ளனர். எனவே, கோயில் நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து இடத்தை மீண்டும் கோயிலுக்கே உரிமையாக்க வேண்டும்.

அத்துடன் விதிமுறைகளை மீறி மின் இணைப்பு கொடுத்த அதிகாரிகள் மற்றும் இடத்தை அபகரிக்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  திமுக நகர் செயலாளர் துரை ஆனந்த் புகார் மனு அளித்தார். இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் அறநிலையத்துறைக்கும் புகார் அளித்த அவர் கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

click me!