யோக்கிய சிகாமணி போல் பேசும் எடப்பாடி பழனிசாமி... மீண்டும் சீனா சீனுக்கு வரும் ஈவிகேஎஸ்..!

Published : Feb 16, 2022, 07:07 AM IST
யோக்கிய சிகாமணி போல் பேசும் எடப்பாடி பழனிசாமி... மீண்டும் சீனா சீனுக்கு வரும் ஈவிகேஎஸ்..!

சுருக்கம்

எடப்பாடி பழனிசாமி உளறுவதிலும், பொய் சொல்லுவதிலும் வல்லவராக இருக்கிறார். குறிப்பாக கொடா நாட்டில் நடந்த கொலை, கொள்ளைகளில் பழனிச்சாமியின் பங்கு பெரும் பங்கு என விசாரணைக்கு பிறகு முழுமையாக வெளிவரும். கண்டிப்பாக நீதிமன்றத்தில் கண்டிக்கப்படுபவர்களில் முதன்மையானவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கப் போகிறார்.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரை மறந்து விட்டனர். அடுத்து ஜெயலலிதாவையும் மறந்து விடுவார். இதேப்போல் அ.தி.மு.க.வை மக்களும் மறந்து விடுவார்கள் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெற்றோமோ அதே போன்று உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணி பெறும். தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கின்றார். இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் கடுமையாக உழைக்கக்கூடியவர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். அவர் பதவி ஏற்ற நாளில் இருந்து 9 மாதமாக கடுமையாக உழைத்து வருகிறார். அவரை பார்த்து நான் பெருமை அடைகிறேன். அவர் தேர்தல் பரப்புரையை காணொலி மூலம் பேசுவதை பா.ஜ.க.வை சேர்ந்தவர்களும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று 500 பேரை தான் சந்திக்க முடிகிறது. ஆனால் முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான மக்களை சந்தித்து வருகிறார். இன்று அ.தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி உளறுவதிலும், பொய் சொல்லுவதிலும் வல்லவராக இருக்கிறார். குறிப்பாக கொடா நாட்டில் நடந்த கொலை, கொள்ளைகளில் பழனிச்சாமியின் பங்கு பெரும் பங்கு என விசாரணைக்கு பிறகு முழுமையாக வெளிவரும். கண்டிப்பாக நீதிமன்றத்தில் கண்டிக்கப்படுபவர்களில் முதன்மையானவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கப் போகிறார்.

அது அவருக்கு மிக நன்றாக தெரியும். அதனால் தான் சட்டப்பேரவையில் கொடநாடு வழக்கு தொடர்பாக அவர் பேசியபோது தன்னை சிறையில் தள்ள முயற்சி நடப்பதாக கூறி, தன்னை குற்றவாளி என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.  அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சேலத்தில் அவரது பணத்தை முடக்கி வைத்தார். தற்போது யோக்கிய சிகாமணி போல் பேசுகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு இதுதான் கடைசி பரப்புரையாக இருக்கும்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றாலும் பா.ஜ.க.வின் அடிமையாக அ.தி.மு.க. இருப்பதை மறுக்க முடியாது. சமூகநீதி குறித்து பேச தார்மீக உரிமையை அ.தி.மு.க. இழந்து விட்டது. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரை மறந்து விட்டனர். அடுத்து ஜெயலலிதாவையும் மறந்து விடுவார். இதேப்போல் அ.தி.மு.க.வை மக்களும் மறந்து விடுவார்கள் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் தொடர்பான எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்த இருந்த  நிலையில் எடப்பாடி பழனிசாமியை ஈவிகேஎஸ் கடுமையாக விமர்சித்து பேட்டியளித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்