இடைத்தேர்தலில் எதிரணியினரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் - வைகோ ஆவேசம்

By Velmurugan s  |  First Published Jan 23, 2023, 4:41 PM IST

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று நேரில் சந்தித்து தமக்கு ஆதரவு கோரினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, எதிரணியில் போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழக்கும் அளவிற்கு நாம் வெற்றி பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்  எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் (தாயகத்தில்) கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவை, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

தடுப்பணைக்கு கிடா வெட்டி நூற்றாண்டு விழா கொண்டாடிய கிராம மக்கள்

Tap to resize

Latest Videos

undefined

இந்த சந்திப்பைத் தொடர்ந்து மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற வைப்பதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உறுதுணையாக இருக்கும்.

எதிரிக்கு டெபாசிட் போய்விட்டது என்ற நிலையை உருவாக்குவதற்கு எங்கள் கட்சியை சார்ந்தவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆளுநர் சனாதன ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சிறப்பான வெற்றி பெரும். 

பழனி முருகன் கோவிலுக்கு புதிய ரயில் பெட்டியை நன்கொடையாக வழங்கிய பக்தர்

இதனைத் தொடர்ந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் பேசியதாவது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் எங்களுக்கு ஆதரவு வழங்குவது மட்டுமல்லாமல் வைகோ அவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். தமிழ்நாட்டில் ஒரு காவல் வீரனாகவும், போர் வீரனாகவும் தமிழ்நாடு முதல்வர் செயல்பட்டு வருகிறார். அவரின் அன்பின் காரணமாக வரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. 

என் மகன் விட்டு சென்ற பணியை நான் இத்தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து பணியாற்றுவேன். பாஜக தேர்தலில் போட்டியிட்டால் நாங்களே அக்கட்சியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு பாஜகவினருக்கு தோல்வியை பெற்று தருவோம் என்றார்.

click me!