ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை!!

Published : Mar 20, 2023, 05:21 PM IST
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை!!

சுருக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக பதவியேற்றார். இந்த நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இதையும் படிங்க: சசிகலா, டிடிவி.தினகரனுடன் கைகோர்க்கிறாரா ஓபிஎஸ்? பெரியகுளத்தில் வைரலாகும் பேனரால் பரபரப்பு..!

மேலும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. ஈவிகேஎஸ் இளங்கோவனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இதையும் படிங்க: ‘கொங்கு மண்டலம்’ டார்கெட்! தமிழக அரசின் பட்ஜெட்டும் திமுக Vs அதிமுக மோதலும் - பின்னணி என்ன?

ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ள நிலையில் இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதுக்குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!