"அவர் குகையிலேயே இருக்கட்டும்"... மோடியை கிண்டலடித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!

By manimegalai aFirst Published May 19, 2019, 7:52 PM IST
Highlights

மோடி கேதார்நாத் குகை சென்றதை பல கட்சி தலைவர்கள் கருத்து சொல்லியிருக்கிறார். இந்நிலையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,தேனி மாவட்ட காங்கிரஸ் வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மோடியின் ஆன்மீக பயணத்தை கிண்டலடித்திருக்கிறார். 
 

மோடி கேதார்நாத் குகை சென்றதை பல கட்சி தலைவர்கள் கருத்து சொல்லியிருக்கிறார். இந்நிலையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,தேனி மாவட்ட காங்கிரஸ் வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மோடியின் ஆன்மீக பயணத்தை கிண்டலடித்திருக்கிறார். 

அவர் கூறியதாவது," தேனி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பலவித சர்ச்சைகளுக்கு பிறகு முடிவடைந்திருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2 வாக்குச்சாவடி மையத்திற்கு மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  எந்த கட்சிகளும் இதனை விரும்ப வில்லை.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். தனது மகனை எப்படியாவது டெபாசிட் தொகையாவது வாங்கச் செய்ய வைக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். அவரது கோரிக்கையை ஏற்றே தற்போது இங்கு மறுதேர்தல் நடத்தப்படுகிறது. இறுதிகட்ட தேர்தல் நடந்து வரும் நிலையில் மோடி 20 மணி நேரத்துக்கு மேலாக குகையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார்.

அவர் குகையிலேயே இருப்பதுதான் இனி நாட்டு மக்களுக்கு நல்லது. வருகிற 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நல்ல தீர்ப்பு கிடைக்கும். இந்தியாவில் ராகுல்காந்தி அடுத்த பிரதமராக பதவி ஏற்பார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். இந்த மாற்றத்தை எதிர்பார்த்துதான் தமிழகத்திலும் இந்தியாவிலும் மக்கள் வாக்களித்து வருகின்றனர்"என கூறினார்.

click me!