இது வெறும் கருத்து கணிப்பு! மக்கள் கணிப்பு வேறு! வாய் வலிக்க கதறும் காங்கிரஸ்!

By manimegalai aFirst Published May 19, 2019, 7:32 PM IST
Highlights

542 தொகுதிகளில், 7 கட்டமாக வாக்கு பதிவுகள் நடந்து முடிந்தது. மேலும் இன்று பலராலும் எதிர்பார்க்கட்ட 'exit poll' கருத்து கணிப்பு வெளியாகி காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியாகி உள்ளது.
 

542 தொகுதிகளில், 7 கட்டமாக வாக்கு பதிவுகள் நடந்து முடிந்தது. மேலும் இன்று பலராலும் எதிர்பார்க்கட்ட 'exit poll' கருத்து கணிப்பு வெளியாகி காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியாகி உள்ளது.

அதன்படி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 306 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறும் என என்டிடிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் வெளியாகி ஒரு பரபரப்பு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 142 இடங்களிலும், எதிர்கட்சிகள் 94 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என தற்போதைய கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது. இதிலிருந்து, பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதை  கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர். 

இந்த கருத்து கணிப்புகள், பாஜக கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலர் கருத்து கணிப்பு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்றும், மக்கள் கருத்து வேறாக மாற 90  சதவீத வாய்ப்பு உள்ளது என கூறி வருகின்றனர். மேலும் 23 தேதி, தேர்தல் முடிவுகள் மட்டுமே இறுதி முடிவு என்றும் இது போன்ற கருத்து கணிப்புகள் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதே காங்கிரஸ் கட்சியினரின் வெளிப்படையான பதிலாக உள்ளது.

click me!