தமிழகத்தில் அதிக தொகுதிகளை அள்ளப்போவது யாரு?... அதிமுக நிலைமை? போனி ஆகாத கட்சிகள் எது? எக்ஸிட் போல் ரிசல்ட்

By sathish kFirst Published May 19, 2019, 7:43 PM IST
Highlights

கடந்த ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்கியது. அதன்பின் வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்துள்ளதால் எக்ஸிட் போல் ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்த ரிசல்டில் பிஜேபி மீண்டும் அமோக மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றும்,  தமிழகத்தில் திமுக தான் பெரிய கட்சியென்று காம்பேக் கொடுக்கவுள்ளது. 

ஆனால், அதிமுக, பா.ஜ.க கூட்டணி நிலைமையோ பரிதாப தோல்வி அடையும் என்று ரிசல்டில் தெரிகிறது. தமிழகத்திலுள்ள கட்சிகளான  மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக கட்சிகள் போனியாகாது எனது தெரிகிறது.

ரிசல்டில், திமுக கூட்டணிக்கு 38 இடங்களில் மொத்தம் 22 முதல் 24 இடங்கள் வரை கிடைக்கும். அதில், தி.மு.க 12-14 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3-5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிகிறது. காங்கிரஸ் 10ல் 7 இடங்கள் வரை படு தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது.  காங்கிரஸ் இழக்கும் இந்த தொகுதிகள் அனைத்தும் அப்படியே அதிமுக ஜெயிக்கும். 

அதிமுக கூட்டணிக்கு 14 முதல் 16 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 8-10 தொகுதிகளிலும், பாஜக 1-2 தொகுதிகளிலும், பா.ம.க 2-4 தொகுதிகளிலும், தேமுதிக 1-2 தொகுதிகளிலும் ஜெயிக்க வாய்ப்புள்ளது.  

இதில், நியூஸ் எக்ஸ் ஊடகம் தமிழகத்தில் தான் நடத்திய எக்ஸிட் போல் கருத்து கணிப்பை ரிசல்ட் வெளியிட்டுள்ளதில், தமிழகத்தில்  குறைந்தது 34 மக்களவை தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 38 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்,  அதிமுகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அப்படி இப்படியென இழுபறியில் அதிகபட்சம் 4 தொகுதிகள் வரை தான் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

click me!