H.Raja: இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக படுதோல்வி அடைவது உறுதி.. அதகளம் செய்யும் எச்.ராஜா..!

Published : Jan 12, 2022, 05:17 AM IST
H.Raja: இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக படுதோல்வி அடைவது உறுதி.. அதகளம் செய்யும் எச்.ராஜா..!

சுருக்கம்

பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி என்று மட்டும் சொல்ல முடியாது. இது திட்டமிட்ட சதி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காநதி செய்த சதி. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலையில், சட்டம் ஒழுங்கை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவதற்கான விவாதங்கள் தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் நடக்கும் இந்த அரசை விடியல் அரசு எனக்கூறுவதை விட, விடியா அரசு என்பது சரியாக இருக்கும் என  பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவரும்,  முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளருமான எச்.ராஜா;- பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி என்று மட்டும் சொல்ல முடியாது. இது திட்டமிட்ட சதி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி செய்த சதி. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலையில், சட்டம் ஒழுங்கை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவதற்கான விவாதங்கள் தொடங்கியுள்ளது. இது அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.

பஞ்சாப்பில் பிரதமர் மோடியை கொல்ல முயற்சி நடந்துள்ளது. தமிழக முதல்வர் அதனை கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை. இங்கு நல்லாட்சி இருக்கிறதா? 1 லட்சம் வேலைவாய்ப்பை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டியவர்கள்தான் இன்றைய ஆட்சியாளர்கள். தமிழகத்தில் நடக்கும் இந்த அரசை விடியல் அரசு எனக்கூறுவதை விட, விடியா அரசு என்பது சரியாக இருக்கும்.

அறநிலையத்துறை என் மீது வழக்குகள் தொடுக்கிறது. அவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள். யாராவது யோக்கியமானவர் இருந்தால் சத்தியம் செய்யட்டும். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எனது குற்றச்சாட்டை சூரியனை பார்த்து நாய் குரைக்கிறது என்கிறார். நான் நாய்தான். நாய் யாரை பார்த்து குரைக்கும்? திருடனை பார்த்துதான் குரைக்கும்.

மேலும்,  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்வதிலும் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது. இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக படுதோல்வி அடைவது உறுதி என எச்.ராஜா ஆவேசமாக கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!