தோல்வியடைந்தும் இபிஎஸ் திருந்தவில்லை.. இது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயல்.. பண்ருட்டி ராமச்சந்திரன்..!

By vinoth kumar  |  First Published Mar 18, 2023, 12:37 PM IST

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று மனுதாக்கல் தொடங்கிய நிலையில் தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். 


ஜெயலலிதா, எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த சட்ட விதகளின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அனைத்து முயற்சி எடுப்போம் என   பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று மனுதாக்கல் தொடங்கிய நிலையில் தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் போட்டியிடாத பட்சத்தில் இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக மூத்த தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டியளிக்கையில்;- தேர்தல் என்றால் முறையான உரிய கால அவகாசத்துடன் நடைபெற வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு அறிவிப்பு மிகவும் சிறுப்பிள்ளைத்தனமானது. அதிமுக தேர்தல் நடத்துவதற்கு என சட்ட விதிகள் உள்ளன. விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துவது, சட்ட விதிகளை மாற்றுவது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல் என குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவராக இருந்தவர் ஓபிஎஸ். அதிமுகவை காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அதிமுகவை சீர்குலைக்கும் முயற்சியில் இபிஎஸ் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகும் எடப்பாடி பழனிசாமி திருந்தவில்லை. அதிமுகவினர் உண்மையான தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர். 

ஜெயலலிதா, எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த சட்ட விதகளின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அனைத்து முயற்சி எடுப்போம்.  மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைத்தையும் விட்டுகொடுத்தோம். இனி இவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். 

click me!