அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்பமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்பமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், தன்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் பணிகளில் இபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 26ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் 18ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என்றும் வாக்குப்பதிவு 26ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை 27ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என்றும் அதிமுக தலைமைக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, அதிமுகவின் தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் போட்டியிடாத பட்சத்தில் இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.