ஏத்தா மீனாட்சி நானேதும் குத்தங்கொற செஞ்சுப்புட்டேனா?: தீ சுடாமலே வெந்து அலறும் செல்லூரார்.

First Published Feb 5, 2018, 4:37 PM IST
Highlights
Etta Meenakshi I was a bit tired?


மதுர மாவட்டத்து அரசியல்வாதிகளுக்கு அசைவ பிரார்த்தனை என்றால் பாண்டி கோயிலும், சைவ அர்ச்சனை என்றால் மீனாட்சி கோயிலும்தான் உச்சபட்ச செண்டிமெண்டே. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்டுள்ள தீ விபத்தினால் அந்த  மண்ணின் கரைவேஷ்டிகள் அதிர்ந்து கிடக்கின்றனர். அதிலும் அம்மண்ணை சேர்ந்த அமைச்சரான செல்லூர் ராஜூ துடியாய் துடித்துக் கிடக்கிறார் என்கிறார்கள் அண்ணனின் அருகாமையிலேயே நிற்கும் அல்லுசில்லுகள்.

செல்லூர் ராஜூ ஜெயலலிதாவுக்கு நிகராக மடங்கி பம்முவது மீனாட்சி சந்நிதானத்தில்தான். இந்நிலையில் அந்த கோயில் ஏற்பட்ட தீவிபத்தினால் வீரவசந்தராய மண்டபத்தின் மேற்கூரை இடிந்ததுடன், மிகக் கடுமையாய் சேதமுற்றிருக்கிறது அந்தப் பகுதி. மூன்று நாட்களாய் மாநகராட்சி லாரிகளை கொண்டு வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தீயில் சிக்கிய கோயில் தூண்களின் வெப்பம் தணியவில்லை.

கோயில் சிற்பங்களின் இந்த தணியாத வெப்பத்தை, மீனாட்சியின் உஷ்ணமாகவே பார்க்கின்றனர் மதுர மக்கள். ’ஆத்தா மீனாட்சி ரொம்ப உஷ்ணத்துல இருக்கிறா. அவள உசுப்புற அளவுக்கு ஊருக்குள்ளே ஏதோ குத்தங்கொற நடந்துடுச்சுப்பே!’ என்று திகில் கிளப்புகிறார்கள் வயதானவர்கள்.

இந்த திகிலை அப்படியே செல்லூர் ராஜூவின் மீது கடத்திவிட்டது அவரது கட்சியை சேர்ந்த ஆனால் அவருக்கு எதிரான கோஷ்டி. ’எடப்பாடி பழனிசாமி இந்த நாட்ட ஆண்டாலும், நம்ம மதுர மண்ணை ஆளுறது செல்லூர் ராஜூதேன். ஆத்தாளுக்கு சரியான மரியாதைகளை அவரு செய்யாத குறைதேம் இப்படி எரிஞ்சு காட்டியிருக்குது. தீ முடிஞ்சு சாம்பலா போன மாதிரி செல்லூரார் அரசியலும் இனி சாம்பல்தேம்னு கட்டம் சொல்லுது.’ என்று அ.தி.மு.க. வாட்ஸ் அப் குரூப் வழியே கெளப்பிவிட்டனர்.

இந்த விவகாரம் அப்படியே செல்லூராரின் கவனத்துக்குப் போக, பாவம் மனிதர் துடித்துவிட்டாராம். ’ஏத்தா நான் என்ன குத்தஞ்செஞ்சேம்? வில்லங்கம் தெரியாத வெள்ளந்திப்பய தானே உம் புள்ள. என் மேலே உனக்கென்னத்தா கோவம்? என்னய கைவிட்டுப்புடாதம்மா. எப்பிடியோ தீ புடிச்ச காரணத்துக்கு என் தலைய உருட்டுறானுக. உம்மவன காப்பாத்துடி என் ஆத்தா.’ என்று மனமுருகி வேண்டியிருக்கிறாராம்.

ஆனால் செல்லூராரை இந்த விஷயத்தில் வெச்சு செய்வது என்று முடிவெடுத்திருக்கும் அவரது எதிரணி மற்றும் தினகரன் அணியினர் தொடர்ந்து செல்லூராரின் தலையை இதில் உருட்டிக் கொண்டே இருக்கிறார்களாம்.

click me!