அதிமுகவில் இணைகிறார்களா 10 திமுக எம்எல்ஏக்கள்...? ஸ்டாலினை அலறவிட்ட இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Sep 7, 2022, 1:16 PM IST

திமுகவை சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடன் பேசி வருவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
 


சிபிசிஐடி விசாரணை- காலம் தாழ்ந்த நடவடிக்கை

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார். இன்று காலை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை காலம் தாழ்ந்த நடவடிக்கை என தெரிவித்தவர்,  காவல்துறை ஆதாரங்களையெல்லாம் சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆனால் இந்த திமுக ஆட்சியில் இது நடைபெறாது, நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளதாக குறிப்பிட்டார்.  

Tap to resize

Latest Videos

சிபிசிஐடி போலீசார் தானாக விசாரணைக்கு வரவில்லையென்று தெரிவித்தவர்,  நீதிமன்றத்தில் பல முறை முறையிட்டபிறகு விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறினார். இதுவே திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு சான்று என தெரிவித்தார். தமிழகத்தில் பல ஆண்டுகள் ஆண்ட கட்சி அதிமுக, பிரதான எதிர்க்கட்சியாகவும் உள்ளோம்,  அதிமுகவை புகார் கொடுத்தும் உடனடியாக எந்தவித நடவடிக்கையும் இல்லை என குற்றம்சாட்டினார். 

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி திடீர் ஆய்வு..! சிக்கலில் ஓபிஎஸ்... காரணம் என்ன..?

அதிமுகவில் இணையும் திமுக எம்எல்ஏக்கள்

திமுக ஒரு குடும்பக் கட்சி, ஒரு கார்ப்பரேட் கம்பெனி, உதயநிதிக்கு ஆட்சியில் எந்த பதவியும் இல்லை, அவர் ஒரு எம்எல்ஏ, அவர் தமிழக அரசின் திட்டங்களை துவக்கி வைக்கிறார். எனவே மேயருக்கான மரியாதையை திமுக ஆட்சியில் எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தவர்,மேயருக்கு உண்டான மரியாதையை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அம்மா உணவகம் ஏழை, எளிய மக்கள் வயிறார பசியாற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது. அம்மா உணவகம் மூடப்படுவதற்கு தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.

அதிமுக தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி, தொண்டர்களுக்கு தான் இடம் தலைவர்களுக்கு இல்லையென தெரிவித்தவர், தினகரன், சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டதாகவும் குறிப்பிட்டார். திமுகவில் இணைவது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த இபிஎஸ், திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் எங்கள் தரப்பினரோடு பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்ற இபிஎஸ்.! முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார்.. தொண்டர்களுக்கு அழைப்பு

 

click me!