மேலே BOSS இருக்கும்போது கீழே இருக்கும் அண்ணாமலையை பற்றி ஏன் கேக்குறீங்க.? ஆவேசமடைந்த எடப்பாடி பழனிசாமி

By Ajmal Khan  |  First Published Apr 23, 2023, 3:10 PM IST

தமிழக பாஜக தலைவர்களாக தமிழிசை, எல் முருகன் இருந்தாங்க, மாற்றப்பட்டாங்க இப்போ இருப்பவர்களும்  மாற்றப்படுவார்கள் , அடுத்து யார் வருவாங்க,   போவாங்க என்பதை பற்றி கண்டுகொள்வதில்லையென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


மனிதர்கள் ஒன்றும் எந்திரம் அல்ல

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 12 மணி வேலை என்ற சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியது கண்டனத்திற்குரியது என தெரிவித்தார். 12 மணி நேர வேலை மசோதாவுக்கு திமுக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மனிதர்கள் ஒன்றும் எந்திரம் அல்ல, 12 மணி நேரம் வேலை செய்வதற்கு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்பது தான் சரியானது என கூறினார். மேலும்  முதலமைச்சர் ஸ்டாலின் எதிரக்ட்சியாக ஒரு பேச்சு.. ஆளும் கட்சியான பிறகு ஒரு பேச்சு பேசுகிறார் என விமர்சித்தார். தமிழக சட்டப்பரவையில் தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக இரண்டுரமணி நேரம் பேசினேன் எதுவும் செய்தியாக வரவில்லை. மக்களுக்கு தெரிந்தா தான் எதிர்கட்சி என்ன செயல்படுகிறார்கள். எப்படி செயல்படுகிறார்கள் என தெரியவரும்.

Tap to resize

Latest Videos

பிடிஆர் ஆடியோ- விசாரணை தேவை

ஊடகங்கள் எதற்கு திமுகவை பார்த்து பயப்படுகிறார்கள் என தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் திமுக செய்திகளை மிகப்பெரிய அளவில் வெளியிட்டதாகவும் கூறினார். அமைச்சர் பிடிஆர் கூறிய 30 ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக மத்திய அரசிடமும், ஆளுநரிடமும் முறையிட்டு விசாரணை நடத்துமாறு வலியுறுத்த இருப்பதாக தெரிவித்தார். 30 ஆயிரம் கோடி என்பது சும்மா இல்லை, 30 ஆயிரம் கோடி  ஊழல் செய்திருப்பதாக நிதி அமைச்சரே சொல்லியுள்ளார். அனைத்து சமூக வலை தளங்களிலும் வெளி வந்துள்ளது. ஆனால்  அமைச்சர் பிடிஆரின் அறிக்கைக்கு பிறகு தான் இது உண்மையோ என்று என்ன தோன்றுகிறது. இந்த குரல் அமைச்சர் பிடிஆர் உடையது தான். 30 ஆயிரம் கோடியை எங்கு வைக்கலாம் என திமுக நிர்வாகிகள் திணறிக்கொண்டுள்ளனர். இந்த ஆடியோ போலியானதாக இருந்தால் முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டியது தானே, வழக்கு போட வேண்டியது தானே,

பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் வகையில் வழக்கு போடப்படுவதாக தெரிவித்தவர், 2 வருடத்தில் 30 ஆயிரம் கோடி அளவிற்கு கொள்ளையடித்து விட்டனர். இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. நாட்டு மக்களுக்கு திட்டங்கள் நிறைவேற்றாமல் பணத்தை சுருட்டி கொண்டுள்ளதாக விமர்சித்தார். எனவே அமைச்சர் பிடிஆரின் ஆடியோ தொடர்பாக உண்மை தன்மையை ஆராய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  பாஜகவுடன் உறவு எப்படி உள்ளது என எழுப்பப்பட்ட கேள்விக்கு  கூட்டணி நல்ல முறையில் தொடர்வதாக தெரிவித்தார்.

மாநில தலைவர்களிடம் பேசமாட்டோம்

அதே நேரத்தில் அண்ணாமலை பற்றி கேள்விகளை கேட்காதீர்கள் என கூறினார். பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா தான் பாஜகவின் பொறுப்பாளர்கள்.  கூட்டணி தொடர்பாக பேச மேலே பாஸ் இருக்காங்க,  கிழே இருப்பவர்களை பற்றி ஏன் கேக்குறீங்க. மாநிலத்தில் தலைவர்களாக இருப்பவர்களை மாறிக்கொண்டே இருப்பார்கள். முன்பு தமிழிசை, எல் முருகன். இருந்தாங்க, இப்போ இருக்காங்க மாற்றப்படுவார்கள் அடுத்து வேற யாரோ வாருவாங்க., 2019 ஆம் ஆண்டும் மேலிடத்தில் தான் பேசினோம், 2021 ஆம் ஆண்டு ம் மேலிடத்தில் தான் பேசினோம் இங்கே இருக்கும் மாநிலதலைவர்களிடம் பேசவில்லை. என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அமமுக பொருளாளரை தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி..! அடுத்தடுத்து பல்டி அடிக்கும் நிர்வாகிகளால் டிடிவி அதிர்ச்சி

click me!