உள்ளாட்சி இடைத்தேர்தல்.. கையெழுத்து போட நான் ரெடி.. நீங்க ரெடியா? ஓபிஎஸ் கடிதத்தை நிராகரித்த இபிஎஸ்..!

By vinoth kumar  |  First Published Jun 30, 2022, 6:40 AM IST

நடைபெறவிருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக படிவத்தில் கையெழுத்திட ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக கடிதத்தில் தெரிவித்திருந்த நிலையில் அதனை இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் நிராகரித்துள்ளார்.


நடைபெறவிருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக படிவத்தில் கையெழுத்திட ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக கடிதத்தில் தெரிவித்திருந்த நிலையில் அதனை இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் நிராகரித்துள்ளார்.

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால், பெருபான்மையான பொதுக்குழு நிர்வாகிகளை கையில் வைத்துள்ள இபிஎஸ் எப்படியாவது ஜூலை 11ம் தேதி பொதுக்கழுவை கூட்டி பொதுச்செயலாளராகிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில், ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவை தடுக்க ஓபிஎஸ் பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார். இருவரும் போடும் சண்டையால் கட்சியின் சின்னமும், கொடியும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- திமுகவுடன் உறவாடும் ஓபிஎஸ்.. தூணாக செயல்படும் எஸ்.பி வேலுமணிக்கு வைத்த ஆப்பு.. அலறிய சி.வி சண்முகம்.

இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் தேர்தல் நடைபெற உள்ள 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கட்சிகளின் சின்னத்தை ஒதுக்க உள்ளது.

இதையும் படிங்க;- தன்னை சந்திக்க வந்த செங்கோட்டையனை திருப்பி அனுப்பிய எடப்பாடியார்.. என்ன காரணம் தெரியுமா?

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-  கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார் என்றார். உள்ளாட்சி இடைத்தேர்லில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த படிவத்தில் கையெழுத்து இட ஓபிஎஸ் தயாராக இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தயாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க;-  எடப்பாடி பழனிசாமிக்கு சுத்துபோடும் ஓபிஎஸ்.. திரும்பிய பக்கமெல்லாம் செக்?

ஏ மற்றும் பி பார்ம் இரண்டிலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் கையெழுத்திட்டால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் நாளை பிற்பகல் 3 மணிக்குள் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தவறினால் தொண்டர்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் யார் என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அந்த கடிதத்தில் ஓபிஎஸ் கூறியுள்ளார். ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தை  மகாலிங்கம் மூலம் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு கொடுத்து அனுப்பினர். ஆனால், ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தை இபிஎஸ் வாங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அந்த கடிதம் மீண்டும் ஓபிஎஸ் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.

click me!