அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதியுங்கள்... அரசுக்கு புகழேந்தி பரபரப்பு கடிதம்!!

By Narendran S  |  First Published Jun 29, 2022, 8:24 PM IST

அதிமுக பொதுக்குழுவிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ள்ளதாக தெரிவித்துள்ளார். 


அதிமுக பொதுக்குழுவிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ள்ளதாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர். இந்த நிலையில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதிமுகவை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவில் பிரச்னை வெடித்தது. இதனிடையே அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடத்தும் ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. அடுத்த மாதம் நடைபெற்ற உள்ள பொதுக் குழுவை வானகரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு நடத்தாமல் மாற்று இடத்தை நிர்வாகிகள் தேர்வு செய்ய முடிவு செய்தனர்.

இதையும் படிங்க: கையில் வேலுடன் EPS.. சூரசம்ஹாரம் ஸ்டார்ட்.! டாராக கிழித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் !

Tap to resize

Latest Videos

இதையடுத்து மீனம்பாக்கம், ஒஎம்ஆர் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடத்தலாம் என பரிசீலிக்கப்பட்டது. பின்னர் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் விஜிபி ரிசார்டில் பொதுக் குழுவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பொதுக் குழு நடைபெறும் இடத்தை தயார் செய்யும் பணிகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் அந்தப் பணிகளை பார்வையிட்டனர். இந்த நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திலேயே மீண்டும் பொதுக் குழுவை நடத்தி கொள்ள நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக நடத்தவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதல்வர் நிகழ்ச்சியை காண ஆபத்தான பயணம்… வைரலாகும் புகைப்படம்!!

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பி.எஸ்  இல்லத்தில் அவரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, தமிழக முதலமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு தான் கடிதம் எழுதியுள்ளேன். தற்போது தமிழகத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஆட்களை திரட்டி பொதுக்குழு கூட்டம் நடத்தினால் நோய் பரவல் அதிகரிக்கும் என கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன். தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், தமிழக அரசு வரும் 11 ஆம் தேதி அதிமுக நடத்தவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஏற்கனவே கடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான எண்ணிக்கையில் ஆட்கள் கலந்து கொண்டதால் அதிமுகவைச் சேர்ந்த பலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது என்பதையும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!