உச்ச நீதிமன்றத்தில் நாம்தான் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவில்லை வழக்குகள் முடிந்த பிறகு நடத்துகிறோம் என தெரிவித்திருக்கிறோம். ஆனால் பொது செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்து விட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
நாம் சட்டரீதியாக வெற்றி பெற்று பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்போம் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான தங்கமணி பங்கேற்றார். அப்போது. அவர் பேசுகையில்;- உச்ச நீதிமன்றத்தில் நாம்தான் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவில்லை வழக்குகள் முடிந்த பிறகு நடத்துகிறோம் என தெரிவித்திருக்கிறோம். ஆனால் பொது செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்து விட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. திமுகவின் தூண்டுதலின் பேரில் சில பத்திரிகைகளும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை என தகவல் பரப்பி வருகின்றன.
இதையும் படிங்க;- இறுமாப்போடு பேசும் திமுக அமைச்சர்களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.. இபிஎஸ் ஆவேசம்..!
ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அதிமுக ஆட்சிக்கு எதிராகவும் வாக்களித்தார். இருப்பினும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது. அப்படியிருந்தும் அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்சை அரவனைத்தார். அதேபோல், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் ஆரம்பித்த பிரச்னை, யார் எதிர்க்கட்சி தலைவர் என்பது வரை நீடித்தது. எப்படியோ போராடி எடப்பாடியாரை எதிர்க்கட்சி தலைவராக ஆக்கினோம்.
மாநிலங்களவை எம்பி தேர்தலின் போது, வேட்பாளரை அறிவிக்க முடியாமல், ஓபிஎஸ் தாமதம் செய்தார். யாரை அறிவித்தாலும் அவர் குறுக்கீடு செய்தார். இதனால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தினோம். அதில் 95 சதவீதம் பேர் எடப்படியார் வரவேண்டும் என விரும்பினர். ஆனால் அதிமுக பிளவுபடவும், ஒன்றாக இருக்கக்கூடாது என சூழ்ச்சி செய்தவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.
இதையும் படிங்க;- மிஸ்டர் எடப்பாடி... "இனி நாங்க ஜீரோ இல்ல ஹீரோ"... இபிஎஸ்சை எகிறி அடித்த வைத்திலிங்கம்.
இவ்வளவு பிரச்சனைகள் செய்த போதிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மரியாதை குறைவு ஏற்படக்கூடாது என்பதற்காக இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தின் கொண்டிருக்கும் போதே பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்ற ஓபிஎஸ் நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கினார். விரைவில் தேர்தல் நடத்தி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஆவார் என தங்கமணி கூறியுள்ளார்.