எடப்பாடி தொகுதியில் இபிஎஸ், போடி தொகுதியில் ஓபிஎஸ் போட்டி.. அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல்.

By Ezhilarasan BabuFirst Published Feb 24, 2021, 11:44 AM IST
Highlights

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியிலும் போட்டியிட வருப்ப மனு வழங்கியுள்ளனர்.  

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியிலும் போட்டியிட வருப்ப மனு வழங்கியுள்ளனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் வேகமாக நெருங்கி வரும் நிலையில்,  அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர்களுக்கான விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியநு.  மார்ச் 5ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்ப மனுக்களை தலைமை கழகத்திடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது.

தமிழக சட்டமன்ற  தேர்தல் தேதி நெருங்கி கொண்டிருக்கிறது, தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன, இந்தத் தேர்தலிலும் மீண்டும் அதிமுக திமுகவுக்கும் இடையே நேரெதிர் போட்டி என்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால் தற்போதைய பிரச்சாரத்தை அதிமுக- திமுக என இரண்டு கட்சிகளும் தொடங்கி உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு கட்சியின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.  அதற்கான விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது,  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் விண்ணப்ப விநியோகத்தை தொடங்கி வைத்தனர். 

தமிழகத்தில் அதிமுக சார்ப்பில் போட்டிய விரும்புவோர் விருப்பமனுபெற 15 ஆயிரம் ரூபாயும்,  புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனுக்கு 5 ஆயிரம் ரூபாயும், கேரளாவில் போட்டியிடுவதற்கான விருப்பமனு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களுக்கான விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியிலும், ஓ.பன்னீர்செல்வம் வழக்கம்போல போடி சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.  

click me!