பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ஓபிஎஸ்க்கு அழைப்பு..? அழைப்பிதழ் அனுப்பி ஷாக் கொடுத்த இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Jul 5, 2022, 2:10 PM IST

ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு, பொருளார் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இபிஎஸ் தரப்பு அழைப்பிதழ் அனுப்பியுள்ளது.
 


திட்டமிட்டபடி பொதுக்குழு

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அவரும் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் மீண்டும் நடைபெறும் என அறிவித்தார். இதற்க்கு  ஓபிஎஸ் தரப்போ கடும் ஆட்சேபம் தெரிவித்தது. ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது என கூறப்பட்டது.  இபிஎஸ் தரப்போ ஒருங்கிணைப்பாளர் தேர்தல்  தொடர்பான தீர்மானங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாத காரணத்தால், ஓபிஎஸ் பொருளாளர் மட்டுமே என  கூறப்பட்டது. எனவே ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள  பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இடைக்கால பொதுச்செயலாராக பதவியேற்பார் என அவரது ஆதரவு நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் கூறினார். ஆனால் இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர் அனுமதி கட்டாயம் என ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது.  

Tap to resize

Latest Videos

என் தெய்வம் குடியிருந்த வீட்டில் கொலை..! குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.. திடீரென விழித்தெழுந்த ஓபிஎஸ் மகன்

16 தீர்மானங்கள் தயார்

இந்தநிலையில் திட்டமிட்டபடி ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளை தீவிரம் படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வானகரத்தில் திறந்தவெளியில் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பொதுக்குழுவில் நிறைவேற்றவுள்ள 16 தீர்மானங்களையும் தயார் செய்துள்ளனர். குறிப்பாக கழக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவி அம்மா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்,  கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொது செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுத்தல், கழக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுத்தல், கழக இடைக்கால பொது செயலாளரை நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல், கழக பொது செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்வது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையா? ஓபிஎஸ்-க்கு பச்சைக்கொடி காட்டிய உயர் நீதிமன்றம்.. அதிர்ச்சியில் இபிஎஸ்.!

ஓபிஎஸ்க்கு அழைப்பு

இந்தநிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக பொருளாளர் என்கிற முறையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இதே போல ஓபிஎஸ் ஆதரவாளர்களாக உள்ள வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் கணக்குகளை ஓபிஎஸ் தாக்கல் செய்யவில்லை. எனவே தற்போதைய பொதுக்குழுவில் ஓபிஎஸ் கணக்குளை சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என கூறப்படுகிறது.  கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்ற நிலையில் அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசியது, காரின் டயர் பஞ்சர் செய்யப்பட்டது போன்ற மோசமான சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் செல்ல மாட்டார் என்றே அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்படியே அந்த பொதுக்குழு நடைபெற்றாலும்  அது எடப்பாடி பழனிசாமிக்கு புகழ் பாடும் கூட்டமாக அமையும் என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

அடி தூள்.. அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி.. வெளியானது தீர்மானம்.. அலறும் ஓபிஎஸ்.

click me!