ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்ட 5 மாவட்ட நிர்வாகிகள்..! அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்

Published : Oct 13, 2022, 12:57 PM ISTUpdated : Oct 13, 2022, 01:01 PM IST
ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்ட 5 மாவட்ட நிர்வாகிகள்..! அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்

சுருக்கம்

ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட வேலூர் மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, ஈரோடு மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டு பிரிவாக அதிமுக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கி வருகிறார். நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளை நீக்கியிருந்தார். இந்தநிலையில் இன்று வேலூர், திருச்சி, ஈரோடு, உள்ளிட்ட 5 மாவட்ட நிர்வாகிகளை நீக்கி உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரனான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினார் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள்

வேலூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. C.K.M.நிந்தியாளந்தம், {மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்)

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. இரா. அழகேசன், (அந்தநல்லூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் )

ஈரோடு மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. M.ரமணி காந்த், (கோவை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் )

திரு. R.G.K. (எ) கார்த்திக், (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர்) 

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த

திரு. R. ராமமூர்த்தி, (கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள்பாசறை துணைச் செயலாளர்)

திரு. S.A.A. பாஸ்கரன், (மேலூர் நகரக் கழகச் செயலாளர்)

திரு. G. கருப்பணன், (மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்)

வாயா போயானு பேசவே பயமாக உள்ளது..! ஸ்டாலின் அதிரடியால் அதிர்ந்து போன பொன்முடி

கவிஞர் பா. சேகர், ( திருப்பரங்குன்றம் மேற்கு பகுதிக் கழக அவைத் தலைவர் )

திரு.A. லெட்சுமிபதிராஜன், திருப்பரங்குன்றம் ஒன்றிய அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்) 

திரு. I.P.S. பாலமுருகன், (திருப்பரங்குன்றம் பகுதிக் கழக முன்னாள் துணைச் செயலாளர் ) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த

திரு. I. செல்வராஜ், (வள்ளியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்)

திரு. E. அழகானந்தம், (வள்ளியூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்)

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன்  எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்,முருங்கை மரத்தில்தான் குடித்தனம்!திமுகவிற்கு வாக்களித்து திணறும் மக்கள்-ஜெயக்குமார்

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!