இரட்டை இலை சின்னம்..! ஓபிஎஸ் உரிமை கோர தடை விதிக்க வேண்டும்..! செக் வைத்த எடப்பாடி

By Ajmal KhanFirst Published Dec 9, 2022, 1:06 PM IST
Highlights

தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது, எனவே அந்த சமயத்தில் கட்சி பணிகளில் இடையூறு விளைவிக்க கூடாது என்றும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் வந்தால், அ.தி.மு.க கட்சி மற்றும் சின்னம், உள்ளிடவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டு பிரிவாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுக யாருக்கு சொந்தம் என உச்சநீதிமன்றத்தில் இரு தரப்பு சார்பாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்படும் வரை அல்லது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் பதில் மனு மற்றும் விளக்க மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி  மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியிருந்தனர்.

திமுகவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்..! திடீர் என ஒத்திவைத்த எடப்பாடி..! என்ன காரணம் தெரியுமா..?

 

ஓபிஎஸ் உரிமை கோர கூடாது

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைரமுத்து தரப்பில் கால அவகாசம் கேட்டு வழக்கை ஒத்திவைக்க கோரப்பட்டது. அதேவேளையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், கட்சி செயல்பாடுகளில் தொய்வு இல்லாமல் இருக்க இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வேண்டும் என கோரினர் விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்று, இடைக்கால நிவாரணம் குறித்து ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி  உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது, எனவே அந்த சமயத்தில் கட்சி பணிகளில் இடையூறு விளைவிக்க கூடாது என்றும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் வந்தால், அச்சமயத்தில் அ.தி.மு.க கட்சி மற்றும் சின்னம், உள்ளிடவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பன்னீர் செல்வத்திற்கு  தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை-இபிஎஸ்யை விளாசிய ஸ்டாலின்

கட்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது

மேலும், பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அதனை காரணம் காட்டி ஏற்கனவே கட்சி விதிகளில் கொண்டு வந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். இது கட்சி பணிகளில் தொய்வு ஏற்படுத்தியுள்ளது, எனவே இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் இடைக்கால மனுவில் ஈ.பி.எஸ் கோரிக்கை வைத்துள்ளார். அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு  உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் வரும் 12ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடதக்கது.

இதையும் படியுங்கள்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 35-ஆவது பலி.! ஆளுனர் இனியும் தாமதிக்க கூடாது..!அன்புமணி ஆவேசம்
 

click me!