தனக்கு தும்மல் வந்தாலும் என்னை பதவி விலக சொன்ன ஸ்டாலின்.. தற்போதைய நிலையில் ராஜினாமா செய்யாதது ஏன்? இபிஎஸ்

By Ajmal KhanFirst Published Mar 11, 2024, 12:05 PM IST
Highlights

தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,  தமிழ்நாடு காவல்துறை, கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதல்வரைப் போலன்றி, துரிதமாக நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதை மருந்து பிடிபடுவது அதிகரித்துள்ளது. போதை பொருள் கடத்தலில் திமுக முன்னாள் நிர்வாகியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திமுக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றது.  இந்தநிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Latest Videos

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 110 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த விடியா ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது. 

மவுனமாக இருப்பது ஏன்.?

அஇஅதிமுக ஆட்சியில் தனக்கு தும்மல் வந்தாலும் நான் பதவி விலக வேண்டும் என்று சொன்ன இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு தார்மீக பொறுப்பேற்று இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்?  அஇஅதிமுக ஆட்சியில் தொடர்ந்து குரல் கொடுத்து, அரசின் கவனத்திற்கு பல்வேறு விஷயங்களைக் கொண்டு வந்த சமூகப் பொறுப்பாளர்கள் பலர், தற்போது திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இந்த போதைப்பொருள் விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்?

கும்பகர்ண தூக்கத்தில் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு காவல்துறை, கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் விடியா முதல்வரைப் போலன்றி, துரிதமாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுகவுடன் கூட்டணி பேச்சை திடீரென நிறுத்திய பிரேமலதா.. யூடர்ன் அடித்து பாஜகவிற்கு வண்டியை விட்ட தேமுதிக

click me!