காங்கிரஸுக்கு ஏன் 10? விசிகவுக்கு மட்டும் 2.. விமர்சனங்களுக்கு தரமான பதிலடி கொடுத்த திருமாவளவன் ..

By Ramya s  |  First Published Mar 11, 2024, 11:45 AM IST

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய முஸ்லீம் லீக், கொ.ம.தே.க கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியையும் ஒதுக்கி உள்ளது. அதே போல் விசிகவுக்கு 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் விசிக 3 தொகுதிகள் கேட்ட நிலையில், இதுதொடர்பாக இழுபறி நீடித்து வந்தது. இதனால் திமுக கூட்டணியில் விரிசல், திருமாவளவன் கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாகவும் தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் இருந்தது. இறுதியாக விசிகவுக்கு 2 தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கியது. எனினும் திமுக உடன் ஏன் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று பலரும் விமர்சித்தனர். இந்த விமர்சனங்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்தார்.

Tap to resize

Latest Videos

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு : நடிகை கஸ்தூரி பேட்டி..

இதுகுறித்து பேசிய அவர் “ காங்கிரஸுக்கு 10, விசிகவுக்கு ஏன் 2 தொகுதிகள் என்று பலரும் விமர்சிக்கின்றனர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் தான் ஆட்சி செய்தது. அன்றைக்கு மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் தான் தொகுதிகளை பிரித்து கொடுத்தது. ஆனால் இன்று மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் தொகுதிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. 20, 30 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி இன்று 10 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி வளர்ச்சி பாதை சரிந்து கொண்டிருக்கிறது.

ஆனால் நமது கட்சி இப்போது முன்னேறி வருகிறது. விசிக கட்சி பரந்த பார்வை கொண்ட ஒரு கட்சியாக இருந்தாலும், அனைத்து தரப்பு பிரச்சனைகளையும் பேசும் கட்சியாக இருந்தாலும், அனைத்து மக்களுக்கும் போராடும் ஒரு கட்சியாக இருந்தாலும், அடிப்படையில் திருமாவளவன் யார்? இவர்கள் ஒரு சக்தியாக வளர்ந்தால், இவர்களை எதிர்ப்பவர்கள் நமது கட்சியை எதிர்ப்பார்களே என்ற கவலை எழும். இவர்களை ஊக்கப்படுத்தினால் இவர்களை பிடிக்காதவர்கள் நமக்கும் வாக்களிக்காமல் போய்விடுவார்களே என்ற பல கவலைகள் எழும். இந்த எதார்த்தத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

2 என்பது 3ஆக அதிகரிக்காமல் இருக்கிறதே என்பது ஒருபுறம் இருந்தாலும், 2, 1 ஆகாமல் இருக்கிறதே என்பதே அதுவே போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. சமூக வலைதளங்களில் வாய்க்கு வந்ததை பலரும் பேசுகின்றனர். ஒருவர் 50 கோடி என்று சொல்கிறார், ஒருவர் 100 கோடி என்கிறார். இப்படி வாய்க்கு வந்ததை பேசுவது. ஏன் திமுக 3 தொகுதி தரவில்லை? ஏன் திருமாவளவன் 3 தொகுதி கிடைக்கவில்லை எனில் திமுக கூட்டணியில் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர். 

நமக்கு அடுத்த ஆப்ஷன். ஒன்று அதிமுக உடன் சேர வேண்டும். இல்லை தனியாக நிற்க வேண்டும். கூடுதலாக ஒரே ஒரு தொகுதிக்காக அதிமுக உடன் சேர்ந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? இதுவரை பேசிய கொள்கைக்கு என்ன ஆவது? இவ்வளவு நாள் உருவாக்கிய வைத்த இமேஷ் என்ன ஆவது? ஒரு கூட்டணியை உடைத்து வெளியே போனால், வெற்றி பெறுவதற்கான சாத்தியத்தை பார்க்க வேண்டும்..

தமிழகத்தை குறி வைத்த மோடி... 3 நாட்கள் தொடர்ந்து சுற்றுப்பயணம்-வெளியான பிரச்சார பொதுக்கூட்ட இடங்களின் பட்டியல்

அதிமுகவும் பாஜகவும் ஏன் பிரிந்து நிற்கிறார்கள்? ஏற்கனவே ஒன்றாக இருந்தே வெற்றி பெறாதவர்கள். இப்போது எப்படி வெற்றி பெறுவார்கள். மோடிக்கும் எடப்பாடிக்கும் சண்டையா? அல்லது அமித்ஷாவுக்கு எடப்பாடிக்கும் சண்டையா? ஏன் தனித்து நிற்கிறார்கள். வேண்டுமென்றே தான் தனித்து நிற்கிறார்கள். தனித்து நின்றல் தான் பாஜகவை எதிர்க்கும் வாக்குகள் திமுக செல்வதை தடுக்க முடியும். இது தான் அவர்கள் திட்டம்..

இதை எல்லாம் கணக்கில் வைத்து தான் நாங்கள் ஒரு முடிவுக்கு வருகிறோம். நமக்கு 3 தொகுதிகள் கொடுக்க திமுக தயங்குகிறது. பரவாயில்லை. இதற்காக வெளியே போனால் திமுக கூட்டணி அல்லது இந்தியா கூட்டணி அல்லது பாஜக எதிர்ப்பு கூட்டணி பலவீனமாகும். அதற்கு நாம் காரணமாக கூடாது. நாம் தான் அகில இந்திய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டுஃப்ம் என்று தொடர்ந்து பேசி வருகிறோம். இதை எல்லாம் கணக்கில் வைத்து தான் முடிவெடுக்கிறோம்” என்று தெரிவித்தார். 

click me!