வன்முறை களமாக மாறி இருக்கும் தமிழ்நாடு..! இதற்கான விளைவுகளை திமுக அரசு சந்திக்க நேரிடும்- இபிஎஸ் எச்சரிக்கை

By Ajmal Khan  |  First Published Jun 26, 2023, 7:46 AM IST

சாமானியர்கள் அஞ்சும் வகையிலும்  அராஜகத்தின் மொத்த உருவமாய் செயல்படும் இந்த ஆட்சியில் வன்முறை களமாக தமிழ்நாடு மாறி இருப்பது வேதனைக்குரியது என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, இனியும் தொடர்ந்து நடக்குமேயானால் அதற்கான விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிப்பதாக கூறியுள்ளார். 
 


மாஜி எம்எல்ஏ வீடு மீது தாக்குதல்

மதுரை மாவட்டம் கருவனூர் கிராமத்தில் உள்ள முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலத்திற்கும், திமுக கிளைச்செயலாளர் வேல் முருகனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மாஜி எம்எல்ஏ பொன்னம்பலம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி அவரது காரையும் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம கருவனூர் பகுதியில் உள்ள பாறை கருப்பசாமி கோவில் விழா கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் யாருக்கு முதல் மரியாதை செலுத்துவதில் என இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கருவனூரில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு‌.பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திமுகவினர் கொடூரமாக தாக்கியும், அவரது வீட்டை சூறையாடியும், அவர்களது வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையை மேற்கொண்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்… pic.twitter.com/wPRNBJB2zQ

— Edappadi K Palaniswami (@EPSTamilNadu)

Tap to resize

Latest Videos

 

காவல்துறை தயக்கம்

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாவட்டம் கருவனூரில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு‌.பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திமுகவினர் கொடூரமாக தாக்கியும், அவரது வீட்டை சூறையாடியும், அவர்களது வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையை மேற்கொண்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் திரு.மூர்த்தி அவர்கள் அவ்வூர் கோயிலுக்கு வந்து சென்றபின்பு இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பதும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய-நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குவதும் மிகுந்த கண்டணத்துக்குரியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கே பாதுகாப்பில்லாத வகையிலும்,

உடனடியாக கைது செய்திடுக

சாமானியர்கள் அஞ்சும் வகையிலும்  அராஜகத்தின் மொத்த உருவமாய் செயல்படும் இந்த ஆட்சியில் வன்முறை களமாக தமிழ்நாடு மாறி இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடானது‌. இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனியும் தொடர்ந்து நடக்குமேயானால் அதற்கான விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிப்பதுடன்,  திரு.பொன்னம்பலம் அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், பிஹார் சென்று பிரதமரை உருவாக்குகிறாராம்.! இறங்கி அடிக்கும் இபிஎஸ்

click me!