முன்னாள் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டாரா இபிஎஸ்...? புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி அடையும் தொண்டர்கள்

By Ajmal Khan  |  First Published Jun 30, 2022, 8:30 AM IST

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்  பன்னீர் ரோஜா மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் பென்ஜமின் மீது இபிஎஸ் கோபப்பட்ட நிலையில், பென்ஜமினை வீட்டிற்கு அழைத்து வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 


இபிஎஸ்க்கு ரோஜா மாலை

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,பொதுக்குழு கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டம் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் தொடங்கியது. பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், சுமார் 12 மணி நேர சட்ட போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 4 மணிக்கு உயர்நீதி மன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டனர். இந்தநிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கடும் பரபரப்பிற்கு மத்தியில் தொடங்கிய கூட்டத்தில் இபிஎஸ்க்கு திருவள்ளூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பென்ஜமின் பன்னீர் ரோஜா மாலை அணிவித்தார்.

Tap to resize

Latest Videos

உள்ளாட்சி இடைத்தேர்தல்.. கையெழுத்து போட நான் ரெடி.. நீங்க ரெடியா? ஓபிஎஸ் கடிதத்தை நிராகரித்த இபிஎஸ்..!

பன்னீர் ரோஜா மாலையை நிராகரித்த இபிஎஸ்

கூட்டம் தொடங்கியதும் இபிஎஸ் மைக்கில் பேச ஆரம்பிக்கும் போது மாலையை அவருக்கு அணிவிக்க முற்பட்டார். ஆனால் கடும் கோபத்தில் இருந்த இபிஎஸ் ரோஜா மாலையை வேண்டாம் எனக்கூறி தவிர்த்தார். மேலும் முன்னாள் அமைச்சர் பென்ஜமின் மீது தனது கோபத்தையும் காட்டினார். இதனையடுத்து பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தில் இருந்து  ஓபிஎஸ் வெளியேறினார். இதனையடுத்து  பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு  மீண்டும் அந்த பன்னீர் ரோஜா மாலையை பென்ஜமின் அணிவிப்பதற்காக கொண்டு வந்தார். அப்போதும் அந்த மாலையை வேண்டாம் எனக்கூறி நிராகரித்தார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் பரவி வைரலானது.

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதியுங்கள்... அரசுக்கு புகழேந்தி பரபரப்பு கடிதம்!!

பென்ஜமினிடம் வருத்தம் தெரிவித்த இபிஎஸ்

இந்தநிலையில் பொதுக்குழு கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்த இபிஎஸ், முன்னாள் அமைச்சர் பென்ஜமினை தனது வீட்டிற்கு அழைத்து தனது வருத்ததை தெரிவித்துள்ளார்.  கடும் நெருக்கடிக்கு மத்தியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதால் தவறு நடைபெற்று விட்டதாக வருத்தம் தெரிவித்த்தாக கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை முன்னாள் அமைச்சர் பென்ஜமின் ஆதரவாளர்கள் தங்களது சமூக வலை தளை பக்கத்தில் பதிவேற்றி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
 

click me!