தேர்தலில் யாருடன் கூட்டணி.? முக்கிய முடிவு எடுக்க அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த எடப்பாடி

By Ajmal KhanFirst Published Dec 8, 2023, 3:13 PM IST
Highlights

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டு ஓபிஎஸ் பிரிந்துள்ள நிலையில், பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அதிமுகவில் அதிகார மோதல்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து யார் அதிமுகவிற்கு தலைமை தாங்குவது என்ற போட்டியில் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலக்கப்பட்டனர்.  இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்ட்த்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில் இன்னும் 4 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக யாருடன் கூட்டணி அமைப்பது. தேர்தல் களம் குறித்து ஆலோசிக்க அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டம் வேண்டும் என்ற விதிப்படி வருகிற 26 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 26ல் பொதுக்குழு

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள  அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற 26.12.2023 செவ்வாய் கிழமை காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை

கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

இபிஎஸ் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை! சட்டத்தின் முன் அனைவரும் சமம்! சாட்டையை சுழற்றிய கோர்ட்

click me!