இபிஎஸ் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை! சட்டத்தின் முன் அனைவரும் சமம்! சாட்டையை சுழற்றிய கோர்ட்

By vinoth kumar  |  First Published Dec 8, 2023, 1:42 PM IST

எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் காலில் ஏற்பட்டுள்ள காயம் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விலக்கு கோருகிறோம் என்றார். 


கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ம் ஆண்டு தற்போது அதிமுக பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது.  தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சாமுவேல் மேத்யூ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதனடிப்படையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி  எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் காலில் ஏற்பட்டுள்ள காயம் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விலக்கு கோருகிறோம் என்றார். அப்போது நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து விரிவாக வாதிட அனுமதிக்க வேண்டுமென்ற இபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று  விசாரணை டிசம்பர் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது. 

click me!