இபிஎஸ், ஓபிஎஸ் இருப்பதுதான் ஒரிஜினல் அதிமுக; இரட்டை இலையும் எங்களுக்குதான் – ஆர்.பி. உதயகுமார்…

 
Published : Oct 02, 2017, 06:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
இபிஎஸ், ஓபிஎஸ் இருப்பதுதான் ஒரிஜினல் அதிமுக; இரட்டை இலையும் எங்களுக்குதான் – ஆர்.பி. உதயகுமார்…

சுருக்கம்

EPS and OBS are the original AIADMK - RB Uthayakumar ...

மதுரை

இபிஎஸும், ஓபிஎஸும் இணைந்ததுதான் உண்மையான அதிமுக என்றும், இரட்டை இலையும் எங்களுக்கே கிடைக்கும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகவுள்ள ஒத்தப்பட்டியில் தமிழ்நாடு பாரம்பரிய வீர விளையாட்டு மாட்டுவண்டி காளைகள் ஒருங்கிணைந்த நலச்சங்கம் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைப்பெற்றது.

இந்தப் பந்தயத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடக்கி வைத்தார். இதில், எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான், மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைத்ததுதான் உண்மையான அதிமுக என்பது அனைவருக்கும் தெரியும்.

எங்கள் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு பிரமாண பத்திரங்களை முழுமையாகவும், பெரும்பான்மையாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆரின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைந்த அதிமுகவான எங்களுக்கே கிடைக்கும். ஏனென்றால் பெரும்பான்மையான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம்.

ஆட்சியைக் கவிழ்க்க பூதக் கண்ணாடி அணிந்து எதிர்க்கட்சிகள் குற்றங்களை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஆனால், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. திமுகவால் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது.

இந்த அரசு ஏற்கனவே சட்டமன்றத்தில் ஒருமுறை பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. ஆட்சி அதிகாரத்தை குறுக்கு வழியில் கைப்பற்ற எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.

தமிழக மக்களின் நலனுக்காக ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியைக் காக்க 1½ கோடி தொண்டர்கள் அரணாக இருப்பார்கள்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்தாண்டு 48 சதவீதத்துக்கு மேல் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்காலம் தொடங்குவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..