
உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மத்திய அரசுக்கு நன்கு தெரியும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெரிந்ததால்தான் ஜெ. மறையும் வரையில் பிரதமர் மோடி வரவில்லை என்றார்.
இடைத்தேர்தலுக்காக வழங்கப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகையும் கையெழுத்தும் பொய்யானது என்று கூறினார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் அமைச்சர்களா, அதிகாரிகளா என்று கேள்வி எழுப்பினார். இதற்கெல்லாம் சிபிஐ விசாரணை வேண்டும் என்றார்.
ஜெயலலிதா மரணத்தில் உண்மை தெரிந்துவிடும் என்பதாலேயே ஆளுநர் மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இவைகள் நீதிபதி விசாரணையில் வெளிவராது என்றும் எனவே சிபிஐ விசாரணை வேண்டும்.
திமுக மீது மக்களுக்கு கோபம் உள்ளது. அது ஆட்சியை கலைக்கவில்லையே என்ற கோபம். இ.பி.எஸ் அரசு மீதான கோபத்தைவிட ஆட்சியை கலைக்காத திமுக மீதுதான் மக்களின் கோபம் உள்ளதாக கூறினார்.
18 பேரின் தகுதி நீக்கத்தை ரத்து செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
திமுக கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வராது. இன்னும் 2 நாட்கள் பொறுத்திருங்கள் தமிழகமே சந்தோஷப்படும் சந்தர்ப்பம் நிகழும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.