
தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை காணப்படுவதாகவும், தமிழ்நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுகவின் முப்பெரும் விழா உதகையில் உள்ள ஏடிசி சுதந்திர திடலில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
அவரது பேச்சின்போது, தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் அதிமுக அரசுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள்.
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகம் தற்போது கொந்தளிப்பான சூழ்நிலையில் காணப்படுகிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி மீது தமிழ்நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர் என்று ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார்.