
இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்களில் 75 பேரில் 69 பேரும், 2450க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து சுமார் 95% நிர்வாகிகளின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக கிரீன் வேஸ் சாலையில் இருந்து வானகரத்திற்கு வரும் போதும், வானகரத்தில் இருந்து கிரீன் வேஸ் சாலை செல்லும் போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் இருந்து வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து கடந்த 4 நாட்களாக இபிஎஸ் தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அதிமுக புதிய அமைப்பு செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதே போல ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கியும் உத்தரவிட்டார்.
மாஸ் காட்டிய இபிஎஸ்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று சாலை மார்க்கமாக தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு புறப்பட்டார். இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டவருக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட எல்லையில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனையடுத்து விழுப்புரம் மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் ஏறி நின்று இபிஎஸ் மீது மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்களின் வரவேற்ப்பை ஏற்றுக்கொண்ட இபிஎஸ் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த போது இபிஎஸ்க்கு 300 கிலோ எடை கொண்ட மலர் மாலையை ராட்சத கிரேன் மூலம் அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்